Expiry Date -க்கும் Best Before Date -க்கும் என்ன வித்தியாசம்..?

Advertisement

Expiry Date VS Best Before in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு அருமையான தகவல் ஒன்றனை பற்றி பார்க்கலாம் வாங்க. நம் அனைவருக்கும் Expiry Date மற்றும் Best Before Date -ல் குழப்பம் இருக்கும். அதாவது, Expiry Date -க்கும் Best Before Date -க்கும் என்ன வித்தியாசம் என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தோன்றி இருக்கும். ஆகையால், இப்பதிவின் மூலம் Expiry Date -க்கும் Best Before Date -க்கும் என்ன வித்தியாசம்..? என்பதை தெரிந்த்துக்கொள்ளலாம் வாங்க.

உணவு பொருட்களில் Expiry Date மற்றும் Best Before Date என்று குறிப்பிட்டு இருப்பது நம் அனைவர்க்கும் தெரியும். அவற்றில் Expiry Date என்றால் அந்த தேதிக்கு பிறகு அதனை பயன்படுத்தக்கூடாது என்பது தெரியும். ஆனால், Best Before Date என்றால் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் பின்வருமாறு Difference Between Best Before and Expiring Date விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

What is The Difference Between Best Before and Expiring Date:

Expiry Date Best Before Date
Expiry Date கொடுத்துள்ள பொருட்கள் அன்றைய தேதிவரை மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும். அந்த தேதியினை தாண்டினால் அதில் கிருமிகள் உருவாகி கெட்டுப்போகும் என்பதை குறிக்கிறது.  Best Before Date என்பது, பாக்கெட்டில் கொடுத்துள்ள தேதி வரை பொருளின் சுவை, நிறம் மற்றும் தன்மை அனைத்தும் மாறாமல் கெடாமல் இருக்கும். அதன் பிறகு, பொருளின் சுவை, நிறம் மற்றும் தன்மை அனைத்தும் மாறிவிடும் என்பதை குறிக்கிறது. (Best Before Date முடிந்ததும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது)

Expiry Date VS Best Before in Tamil:

Expiry Date:

கட்டாயம் ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் கெட்டுப்போய் விடும் என்ற பொருட்களுக்கெல்லாம் Expiry Date என்று குறிப்பிடுவார்கள். அதாவது, Expiry Date போட்டு இருக்கும் பொருட்கள் எல்லாம் கெட்டுப்போகும் தன்மை கொண்டது. உற்பத்தி செய்யப்பட்ட பொருளினை தேதியின் அடிப்படையில் சோதனை செய்து துல்லியமாக இந்த தேதிக்குள் இந்த பொருள் கெட்டுபோகிறது என்பதை உறுதி செய்து அதற்காக தேதியினை குறிப்பிடுவது தான் Expiry Date. அவர்கள் கொடுத்துள்ள Expiry Date வரையும் தான் அந்த பொருள் பாதுகாப்பானது. அதற்கு மேல் அந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதை நாம் அறிய வேண்டும். கடைசி நாள் வரை உணவுப் பொருளை உட்கொள்வது பாதுகாப்பானது. அதன் பிறகு பயன்படுத்தினால் அது உடலிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதாகும்.

பேக்கிங் சோடா Vs பேக்கிங் பவுடர்..! வித்தியாசம் என்ன தெரியுமா..?

Best Before Date:

Best Before Date என்பது அவர்கள் கொடுத்துள்ள Best Before Date தேதி வரை பொருளின் சுவை, நிறம் மற்றும் தன்மை அனைத்தும் மாறாமல் கெடாமல் இருக்கும்.  பாக்கெட்டில் கொடுத்துள்ள Best Before Date – ற்கு பிறகு அந்த பொருள் கெட்டுப்போகாமல் இருந்தாலும் அதன் சுவை, நிறம், தன்னை போன்றவை குறைந்து விடும். 

Best Before Date என்பது உற்பத்தியாளர்கள் FSSAI உணவு சான்றிதழ் வாங்குவதற்காக உணவு பொருளை ஒரு பாக்கெட்டில் குறைந்தது 6 மாதத்திற்கு வைத்து சோதனை செய்வார்கள். அதாவது, 6 மாதம் வரை பாக்கெட்டில் உள்ள பொருளில் ஏதேனும் கிருமிகள் உள்ளதா.? இது 6 மாதம் வரை கெட்டுபோகாமல் இருக்கிறதா.? இதன் சுவை 6 மாதம் வரை நீடித்து இருக்கிறா என்பதை அறிந்து அதற்கேற்றவாறு Best Before Date என்று குறிப்பிடுவார்கள். அந்த தேதியிலிருந்து இனி அந்த பொருள் அதன் சரியான நிலையில் இல்லை என்பது அர்த்தம்.  அதாவது, உணவு அதன் சரியான வடிவத்தில் இல்லை என்றும்  புத்துணர்ச்சி, சுவை, நறுமணம் அல்லது ஊட்டச்சத்துக்களை இழக்கக்கூடும் என்பதையும் குறிப்பிடுகிறது.

RAM -மிற்கும் ROM -மிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement