GST மற்றும் VAT
வரி என்பது நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் சேவைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வசூலிக்கப்படும் ஒரு தொகை. நம்மில் பலருக்கு நாம் செலுத்த கூடிய வரி எதற்காக அந்த வரி தொகை எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் நாம் தினமும் ஒரு தொகை வரியாக செலுத்துகின்றோம். அந்த வரி எதற்காக செலுத்துகின்றோம் என்பது தெரிவதில்லை. இந்திய அளவில் ஒரு வரி வசூலிக்கப்படுகிறது. மாநில அளவில் ஒரு வரி அமலில் இருக்கிறது இவற்றிற்கான காரணம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இரண்டு வரிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
GST vs VAT:
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி | Goods and Services Tax (GST):
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி, GST என்று அழைக்கப்படுகிறது.
GST-யின் மூலம் வரிக்கு வரி வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.
ஒரு பொருளை உற்பத்தி செய்து அதனை விற்பனைக்குக் கொண்டுவர விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி, வாட் (VAT) என பல வரிகள் விதிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான வரி விதிப்பு நடைமுறைகள் இருந்தன. அவற்றை நீக்கி இந்திய அளவில் அனைத்து பகுதிக்கும் ஒரே மாதிரியான வரி வசூலிக்கப்படுவது GST ஆகும்.
இந்தியா முழுவதும் GST மூலம் ஒரே மறைமுக வரிச் சட்டம் செயல்படுகிறது.
GST இந்தியாவில் 2017-ல் அமல்படுத்தப்பட்டது.
மதிப்புக் கூட்டு வரி | Value-Added Tax (VAT):
மதிப்புக் கூட்டு வரி (VAT) என்பது, ஒரு பொருளின் ஒவ்வொரு பரிமாற்றங்களின் போதும் அதாவது பொருளின் விற்பனையின்போது விதிக்கப்படுகின்ற வரியாகும். VAT வரியின் மூலம், ஒரு பொருளின் ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் அதிகரிக்கின்ற விலையை பொருத்து அதன் VAT வரியும் அதிகரிக்கும்.
ஏப்ரல் 1, 2005 அன்று இந்தியாவில் VAT அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி மாநிலங்கள் அளவில் அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு VAT விகிதங்களும் சட்டங்களும் கடைபிடிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி என்றால் என்ன? | GST Meaning in Tamil
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |