Difference Between Pithalai and Vengalam in Tamil | வெண்கலம் vs பித்தளை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வெண்கலம் மற்றும் பித்தளை இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம்மில் பலருக்கும் வெண்கலத்திற்கும் பித்தளையிற்கும் என்ன வேறுபாடு என்ற குழப்பம் இருக்கும். அக்காலத்தில் எல்லாம் பெரும்பாலும் வெண்கலம் மற்றும் பித்தளை பாத்திரத்தில் தான் சமைக்கவும் செய்வார்கள் சாப்பிடவும் செய்வார்கள். அக்காலத்து வெண்கலம் பித்தளை பொருட்களை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.
ஏன்.? நம் வீடுகளில் கூட நம் தாத்தா பாட்டிகள் பயன்படுத்திய வெண்கலம் பித்தளை பாத்திரங்கள் இருக்கும். அப்படி நாம் வீட்டில் பார்க்கும் அக்காலத்து பொருட்களில் எது வெண்கலம்.? எது பித்தளை.? என்பதே தெரியாது. இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் வெண்கலம் பித்தளை வேறுபாடு (Difference Between Pithalai and Vengalam in Tamil) பற்றிய விவரங்களை கொடுத்துள்ளோம்.
வெண்கலம் பித்தளை வேறுபாடு:
பித்தளை மற்றும் வெண்கலம் இரண்டுமே தாமிர கலவைகள் தான். இருந்தாலும், இவற்றில் பிற உலோக கலவைகளும் சேர்ந்து இருப்பதால், இவற்றிற்கு இடையே சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!
வெண்கலம் என்றால் என்ன.?
வெண்கலம் என்பது, தாமிரம் மற்றும் தகரத்தை கலந்து செய்யப்பட்ட கலவை ஆகும். அதாவது, வெண்கலம் 88% செம்பாலும் 12% தகரத்தாலும் செய்யப்பட்ட கலவை ஆகும். இது, தாமிரத்தை விட மிகவும் கடினமாக இருக்கும். வெண்கலம் ஆனது, சிவப்பு -பழுப்பு நிறம் கொண்டது. மேலும், இது கடினமான மற்றும் உடையக்கூடிய தன்மை கொண்டது.
இது உப்பு நீரில் இருந்து அரிப்பை எதிர்க்கும் தன்மை கொண்டது ஆகும். வெண்கலம் பாத்திரத்தில் சமைப்பதன் மூலம், உணவின் ஊட்டச்சத்து மதிப்பில் 97 சதவீதத்தை தக்கவைத்து கொள்கிறது. எனவே, வெண்கல பாத்திரம் சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் ஒரு நல்ல பாத்திரமாக இருக்கிறது.
பித்தளை என்றால் என்ன.?
பித்தளை என்பது, தாமிரம் மற்றும் துத்தநாகத்தால் செய்யப்பட்ட கலவை ஆகும். அதாவது, பித்தளை ஆனது 66% செம்பினாலும் 34% துத்தநாகத்தாலும் செய்யப்பட்ட கலவை ஆகும். இது, பிரகாசமாகவும் தங்கம் போன்ற தோற்றத்தையும் அளிக்கிறது. இதுவும் சமைப்பதற்கு உரிய பாத்திரமாக இருக்கிறது.
இது வெண்கலத்தை விட இணக்கமானது மற்றும் நன்றாக வார்க்கக்கூடியது ஆகும். பித்தளை ஆனது, உணவின் ஊட்டச்சத்து மதிப்பில் 90 முதல் 92 சதவீதம் வரை தக்கவைத்து கொள்கிறது. மேலும், பித்தளை பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் நீர் மற்றும் உணவு ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது ஆகும். அதுமட்டுமில்லாமல், உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
வெண்கலத்திற்கும் பித்தளைக்கும் இடையே உள்ள வேறுபாடு:
பித்தளை | வெண்கலம் |
பித்தளை என்பது தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் உலோக கலவை ஆகும். | வெண்கலம் என்பது தாமிரம் மற்றும் தகரத்தின் உலோக கலவை ஆகும். |
பித்தளை, தங்கம் போன்ற நிறத்தினை உடையது. | வெண்கலம் சிவப்பு பழுப்பு நிறமுடையது. |
பித்தளை ஆனது 66% செம்பினாலும் 34% துத்தநாகத்தாலும் செய்யப்பட்டது ஆகும். | வெண்கலம் 88% செம்பாலும் 12% தகரத்தாலும் செய்யப்பட்டது ஆகும். |
பித்தளை வெண்கலத்தை விட புதியது ஆகும். | வெண்கலம் பித்தளையை விட பழமை வாய்ந்தது ஆகும். |
பித்தளை குறைந்த உருகுநிலை கொண்டது ஆகும். | வெண்கலம் அதிக உருகுநிலை கொண்டது. |
பித்தளை ஆனது, அதன் வலிமை மற்றும் நீர்த்துப்போகும் தன்மைக்கு பெயர் பெற்றது. | வெண்கலம் அதன் கடின தன்மைக்கு பெயர் பெற்றது. |
பித்தளை ஆனது, கம்பிகள், இசைக்கருவிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. | வெண்கலம் ஆனது, கத்திகள், நாணயங்கள் மற்றும் தாங்கு உருளைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. |
பித்தளையை மறுசுழற்சி செய்வது எளிமையானது. | விண்கலத்தை மறுசுழற்சி செய்வது கடினம். |
இரும்பு, பித்தளை, செம்பு விலை நிலவரம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |