Diwali History in Tamil
இன்றைய சூழலில் ஒரு பண்டிகைக்கான காரணம் என்ன அதன் வரலாறு என்ன என்பது இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் சிறுவர்களுக்கு அன்றைய தினம் சொல்லமுடியாத மகிழ்ச்சியை வழங்கும். அதுவும் தீபாவளி போன்ற பண்டிகைகள் சிறுவருகளுக்கு புதிய ஆடைகள், மத்தாப்புகள், பலகாரங்கள் என்று புதிய உலகமாக இருக்கும். ஆனால் அந்த பண்டிகை என் கொண்டாடப்படுகிறது என்பது தெரிவதில்லை. இது போன்ற இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் போதுதான் வரும் தலைமுறையினரிடம் அது சென்றடையும். அந்தவகையில் தீபாவளி பண்டிகை எதனால் கொண்டாடப்படுகிறது. அதற்கு பின்னல் உள்ள வரலாறு தெரியாதவர்களுக்காக இந்த பதிவு வாருங்கள் தீபாவளி பற்றிய சுவாரசியமாக தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Diwali History in Tamil:
தீபாவளி என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த பண்டிகை ஒளியின் வெற்றிக்கு எதிராக இருளின் சக்திகளைக் குறிக்கிறது. தீபாவளி என்ற சொல் “தீபம்” மற்றும் “ஆவளி” என்ற இரண்டு சொற்களிலிருந்து உருவானது, அதாவது “தீபங்கள் வரிசை” என்று பொருள்படும்.
தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர்.