தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
வருடத்திற்கு ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. இதற்காக சம்பாதிக்கின்ற பணத்திலிருந்து தினந்தோறும் சேமித்து வருகிறார்கள். ஏனென்றால் இந்த காலத்தை பொறுத்த வரை பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் நகைகளை வாங்கி சேமிப்பது அவசியமானது.
ஏனென்றால் தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்திலிருந்து வாங்கும் நகையை சில விஷயங்களை பார்த்து வாங்குவது அவசியமானது. அவை என்னென்ன விஷயம் என்று இந்த பதிவில் வாயிலாக அறிந்து கொள்வோம்.
தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
நகை வாங்கும் போது டிசைன் நல்லா இருக்கா, நமக்கு நல்லா இருக்கா என்றெல்லாம் பார்த்து தான் வாங்குவோம். ஆனால் நாம் வாங்க கூடிய நகையானது போடும் போது அதே விலையை வாங்க முடியுமா என்று பார்த்து வாங்க வேண்டும். சில நகைகள் நாம் போடும் போது வாங்கிய விலைக்கு எடுத்து கொள்ள மாட்டார்கள் அவை என்ன என்று தெரிந்து கொள்வோம்.
நீங்கள் நகைகளை வாங்கும் போது எனாமல் வைத்தது, கல் வைத்தது, அரக்கு வைத்த நகைகளை வாங்க கூடாது.
தங்க நகையில் இது இல்லையென்றால் வாங்காதீர்கள் மத்திய அரசு வைத்த ஆப்பு..!
ஏனென்றால் இந்த மாதிரி நகைகளில் நீங்கள் வாங்கும் போது உள்ள விலை போடும் போது கிடைக்காது. நீங்கள் சின்ன நகையாக சைடு காது, மூக்குத்தி, மோதிரம் போன்ற சின்ன நகையில் எந்த டிசைன் எடுத்தாலும் பிரச்சனை இருக்காது. அதுவே நீங்கள் பெரிய நகையாக வாங்கும் போது கல் வைத்த நகையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
கல் வைத்த நகைகளை வாங்கும் போது பவுன் மற்றும் கல் இரண்டிற்கும் சேர்த்து தான் வெயிட் போட்டு ரேட் சொல்லுகிறார்கள். அதுவே இந்த நகையை போடும் போது கல்லை தனியாக எடுத்து நச்சு விட்டு மீதமுள்ள நகைக்கு மட்டும் தான் பணத்தை தருவார்கள். அதனால் சின்ன நகையாக வாங்கும் போது உங்களுக்கு விருப்பட்ட டிசைனில் வாங்கி கொள்ளலாம். அதுவே பெரிய நகையாகவும், அவை வாங்கிய விலை கொடுக்கும் போதும் இருக்க வேண்டும் என்றால் மேல் கூறப்பட்டுள்ள டிசைனை தவிர்த்து விடவும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |