புயல் எப்படி உருவாகிறது தெரியுமா ..?

Advertisement

புயல் எப்படி உருவாகும்

நண்பர்களே வணக்கம்..! இன்று அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம்..! அது என்னவென்றால் புயல் எப்படி உருவாகுகிறது என்பதை பற்றி தான். பொதுவாக மழை காலம் வந்து விட்டால் அனைவருமே டிவி முன்புதான் இருப்போம் அதற்கு காரணம் புயல் எப்போது வருகிறது, பயல் மையம் கொண்டுள்ளதா என்பது பார்த்து கொண்டு இருப்போம் ஆனால் அது எப்படி உருவாகிறது,

தாழ்வு பகுதியாக எப்படி மாறுகிறது என்று நிறைய கேள்விகள் நம்முள் பலபேருக்கு இருக்கும். அது அனைத்திற்கு பதில் தரும் விதமாக இந்த பதிவு இருக்கும், வாங்க எப்படி என்று பார்ப்போம்..!

புயல் எப்படி உருவாகும்?

முதலில் பூமியில் நிலநடுக்கோட்டு பகுதியில் தான் இருக்கும். அதாவது பூமியுடைய நிலநடுக்கோட்டு பகுதியில் அதாவது பூமத்திய ரேகையில் வெப்பத்தால் கடல் நீர் சூடாக மாறுகிறது.

இந்த வெப்பத்தால் ஆவியாகும் நீர். அது கடலில் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கிறது. அந்த சூடான ஈரகாற்று செங்குத்தாக நேராக மேல் செல்லும்.

ஆகவே கடலில் மேற்பரப்பில் உள்ள காற்று அனைத்தும் மேலே செல்வதால் அங்கு குறைவான காற்று மட்டுமே இருக்கும். அந்த இடத்தில் அதாவது வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறைகிறது.

இந்த குறைவான காற்றை நிரப்புவதற்காக அதன் சுற்று பகுதியில் உள்ள காற்று வளிமண்டல காற்றாக சுழன்று விரிகிறது.

இதையும் பாருங்கள் –> மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?

அவ்வாறு மேலே சென்று தாங்கும் சூடான ஈரகாற்று குளிர்ந்து நீர் வலைகள் உறைந்து மேகமாக மாகிறது, அந்த மேகம் காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது. இந்து அனைத்தும் படி படியாக 4 முறை நிகழ்கிறது.

இது தொடர்ந்து ஆவியாகுதால் நடைபெறுவதால் அந்த பகுதியை மையமாக கொண்டு பெரிய அளவில் குறைந்த காற்றுழுத்த மண்டலமாக உருவாகிறது. அதேபோல் குறைந்த அழுத்த பகுதியை நிரப்ப வலிமையான காற்று தேவைபடுகிறது. ஆகவே அந்த குறைந்த காற்று அழுத்தத்தை சுற்றி சுழன்று வேகமாக நிரப்ப பார்க்கும்.

அதனுடைய வேகம் அதிகரித்து கொண்டே செல்வதால் அது புயலாக மாறுகிறது. அதனால் தான் செயற்கைகோள் படத்தில் மேகங்கள் வட்டவடிவில் காட்சி தருகிறது. இதற்கு கண் என்று பெயர், அந்த மேகம் சுழலும் வேகத்தை வைத்தும் அடர்த்தியையும் வைத்து கரையை எப்போது கடக்கும் என்றும் சொல்லமுடியும். அது நகரும் போது நமக்கு மழை சூறாவளியாக இருக்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இடி, மின்னல் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement