ISI முத்திரை என்றால் என்ன..? எதற்கெல்லம் ISI முத்திரை வாங்க வேண்டும் தெரியுமா..?

Advertisement

Do You Know What ISI Stamp is Used For 

பொதுவாக நாம் ஒரு பொருள் வாங்க போகிறோம் என்றால் அந்த பொருள் தரமானதாக இருக்கிறதா என்று பார்ப்போம். அதுவே தங்கமாக இருந்தால் நாம் வாங்கம் போது தங்கத்தில் 916 முத்திரை இருக்கிறதா, அது எத்தனை சவரன் மற்றும் KDM முத்திரை இதுபோன்றவற்றை எல்லாம் உள்ளதா என்று பார்த்து தான் வாங்குவோம். ஆனால் இதில் நமக்கு தெரியாத ஒரு முத்திரையும் இருக்கிறது. அதாவது நம் வீட்டில் உள்ளவர்கள் ISI முத்திரை என்று கூறுவார்கள். இவ்வாறு இருக்கையில் சிலருக்கு இந்த ISI முத்திரை என்றால் என்ன..? இது எதற்காக பயன்படுகிறது போன்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும். அதனால் இன்று ISI முத்திரையின் முழு தகவலையும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ஐ எஸ் ஐ முத்திரை என்றால் என்ன.?

ISI முத்திரையின் விரிவாக்கம் Indian Standards Institute என்பதாகும். ISI முத்திரை ஆனது தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்திறன் மற்றும் தரநிலைகளை ஆராய்ந்து அவற்றை நிர்ணயிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதுவே ISI முத்திரை எனப்படும்.

அதுபோல ISI முத்திரை பதிவு செய்யப்பட்ட ஒரு பொருளை வாங்கினால் அதனுடைய தரம் மற்றும் பாதுகாப்பு என்பது சிறப்பாக இருக்கும்.

எந்தெந்த பொருட்களுக்கு ISI முத்திரை வாங்க வேண்டும்:

  • தெர்மாமீட்டர்
  • சிமெண்ட்
  • LPG சிலிண்டர்
  • எலக்ட்ரிக்கல் பொருட்கள்
  • கால்நடை தீவனம்
  • மருத்துவ பொருட்கள்
  • பேக்கிங் செய்த மினரல் வாட்டர்
  • உணவு பொருட்கள்
  • ஆட்டோ-மொபைல் பாகங்கள்
  • ஜவுளி
  • பிளாஸ்டிக் பொருட்கள்

மேலே சொல்லப்பட்ள்ள பொருட்கள் அனைத்திற்கும் ISI முத்திரையினை கட்டாயமாக வாங்கி கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ யூஸ் பண்ணாத சிம் கார்டு எத்தனை நாட்கள் கழித்து Deactivate செய்யப்படும் தெரியுமா.. 

ஐ எஸ் ஐ முத்திரை பயன்கள்:

ISI முத்திரை பெற்ற பொருளினை நாம் வாங்குவதனால் சந்தையில் அங்கீகரிக்கப்பட்ட பொருள் என்று நிலைமை உண்டாக்குகிறது. மேலும் தொழில் ரீதியாக போட்டி மற்றும் தடை எதுவும் வராது.

மக்கள் அனைவரும் இந்த முத்திரை உள்ள பொருட்களை நம்பிக்கையுடன் வாங்கி பயன் அடைகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விற்பனையினை அளவினை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.

மேலும் சட்ட ரீதியாக பார்க்கும் போது ISI முத்திரை வாங்காமல் பொருட்கள் விநியோகம் செய்வது என்பது முற்றிலும் தவறுதலாக கருதப்படுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement