வாழை பெயர் காரணம்
இன்றைய பதவில் அனைவரும் தெரிந்து கொள்ள ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். வாழைப்பழம் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். வாழைப்பழம் பல நன்மைகளை கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இருந்தாலும் இந்த வாழைப்பழத்தின் பெயருக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. சரி வாழைப்பழத்திற்கு ஏன் வாழை என்ற பெயர் வந்தது. இதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? காரணம் தெரியாதவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.
உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா…? |
‘வாழை’ என்று பெயர் வர காரணம் என்ன..?
முக்கனிகளில் வாழைப்பழமும் ஓன்று. மா, பலா, வாழை என்று சொல்வார்கள். பசி எடுக்கும் போது ஓரு வாழைப்பழம் சாப்பிட்டாலும் பசி பறந்து போய்விடும். வாழைப்பழம் நம் இந்தியாவை தாயகமாக கொண்டுள்ளது. இது உலகில் அனைத்து பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வாழை மரம் இன்றும் பல வீடுகளில் காணப்படுகிறது.
இந்த வாழை இலைக்கு எப்படி வாழை என்ற பெயர் வந்தது என்று பலரும் யோசித்திருப்பீர்கள். சிலர் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். ஆனால் இதற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.
இந்த காலத்தில் குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை இன்குபேட்டர் (Incubator) வைத்து பாதுகாத்து வருகின்றோம். இந்த காலத்தில் இதுபோன்ற பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.
ஆனால் அந்த காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் கிடையாது. அதனால் அந்த காலத்தில் குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை வாழை இலையில் வைத்து தான் பாதுகாப்பார்கள்.
அதாவது, ஒரு வாழை இலையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை வைத்து, அந்த குழந்தையின் மேல் மற்றொரு வாழை இலையால் போர்த்தி வைப்பார்கள். அப்படி செய்வதால் அந்த குழந்தை பிழைத்து விடும். இதுபோல குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை வாழை இலையில் வைத்து தான் நம் முன்னோர்கள் பிழைக்க வைத்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் வாழை இலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் நோய்களை விரைவில் குணமாக்க கூடியது. இந்த வாழை இலை குளிர்ச்சியான தன்மையை கொண்டுள்ளதால், தீக்காயம் பட்டவர்களை படுக்க வைக்க பயன்படுத்தப்பட்டது.
இதுபோல மனித உயிர்களை காத்து வாழ வைக்கும் தன்மையைக் கொண்டதால் இதை வாழை என்று அழைத்தார்கள். அதனால் தான் இதற்கு வாழை என்று பெயர் வந்தது.
வாழைப்பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |