Does daughter have right in father’s property in tamil
அந்த காலம் இல்லை, இன்றைய காலமும் இல்லை, எந்த காலமாக இருந்தாலும் சொத்து என்றால் கூட பிறந்தவர்கள் கூட எதிரிகளாக மாரி விடுகிறார்கள். அதனால் சொத்து பற்றிய சட்டத்தை பற்றி அறிந்திருக்க வேண்டும். நம் பதிவில் சொத்து பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். கிராமத்தில் உள்ள பெண்கள் ஆண்களுக்கு மட்டும் தான் சொத்தில் உரிமை இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு சொத்தில் உரிமை உள்ளது என்ற சட்டம் இருக்கிறது. அதனால் தான் இந்த பதிவில் அப்பா சொத்தில் மகளுக்கு உரிமை இருக்கிறதா.! இல்லையா.! என்று முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை இருக்கிறதா.!
பெரும்பாலான பெண்களுக்கு மகன்களை போலவே மகள்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை.
அப்பா சொத்து மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம்
இந்து வாரிசு சட்டம்:
2005 ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டம் 1956 தந்தையின் சொத்தில் மகளுக்கும் சம உரிமை இருக்கிறது என்று சட்டபூர்வமாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தாத்தாவின் சொத்தானது அப்பாவின் பெயரில் இருந்தால் அதனை உரிமை கோர முடியும். அதுவே தந்தை சுயமாக சம்பாதித்த பணத்தில் நிலமோ அல்லது வீடோ அல்லது ஏதோ ஒரு சொத்து வாங்கியிருந்தால் அதனை உரிமை கோர முடியாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் தந்தை சுயமாக சம்பாதித்த பணத்திலிருந்து சொத்து வாங்கியிருந்தால் அவரின் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானலும் எழுதி வைப்பதற்கு முழு உரிமை இருக்கிறது. இதனை மகளானவள் எதிர்த்து போராட முடியாது.
திருமணம் ஆன பெண்களுக்கு தந்தையின் சொத்தில் உரிமை உள்ளதா.!
2005ஆம் ஆண்டு 1956 இந்து வாரிசு சட்டம் திருத்தத்திற்கு பிறகுமகள் சம வாரிசாக கருதப்படுகிறார். அதனால் மகளுக்கு திருமணம் ஆன பிறகும் சொத்தில் முழு உரிமை இருக்கிறது.
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..? |
பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..? |
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |