தாத்தா சொத்து
பொதுவாக சொத்து என்பது சிலருக்கு பூர்வீகம் பூர்வீகமாக இருக்கும். சிலருக்கு இதற்கு மாறாக சொந்தகமாக அவர் தற்போது வாங்கி சேர்த்து வைத்துள்ள சொத்தாகவும் இருக்கும். இத்தகைய சொத்தினை வாங்கி சேர்ப்பது ஒரு பெரிய கஷ்டம் என்றால் அதனை விட பெரிய கஷ்டம் அதை எல்லோருக்கும் பிரித்து கொடுப்பதில் தான் உள்ளது. இந்த சொத்தினை பிரிக்கும் போது வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும். இதுமட்டும் இல்லாமல் அம்மா சொத்து யாருக்கு சொந்தம், அப்பா சொத்து யாருக்கு சொந்தம் மற்றும் வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் என்ற பல கேள்விகள் சொத்து ரீதியாக நமக்கு வந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் இன்று தாத்தாவின் சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா..! இல்லையா..! என்று இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா..? |
தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா:
தாத்தாவின் சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா என்று கேட்டால் கட்டாயமாக தாத்தாவின் சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டு. ஆனால் அவற்றில் சில விதிமுறைகள் உள்ளது.
விதிமுறை- 1
தாத்தாவின் பூர்வீக சொத்து என்றால் அதில் பேத்திக்கு பங்கு உண்டு. அதுமட்டும் இல்லமால் தாத்தா பேத்தியின் பெயரில் அந்த சொத்துக்கான உயிலை எழுதி வைத்தாலும் கூட அந்த சொத்தில் பேத்திக்கு பங்கு தாராளமாக உண்டு.
விதிமுறை- 2
அதே போல தாத்தா சொந்தமாக சம்பாதித்த சொத்தை அவருடைய மகன் மற்றும் மகள் பெயரில் உயில் எழுதி வைத்தாலோ அல்லது பிரித்து கொடுத்தாலோ அதில் பேத்தி உரிமை கொண்டாட முடியாது.
அதுமட்டும் இல்லாமல் அதில் பேத்திக்கு பங்கும் கிடையாது. ஏனென்றால் அது தாத்தா சொந்தமாக சம்பாதித்த சொத்து ஆகையால் அது அவருடைய விருப்பம்.
ஆகவே தாத்தாவின் பூர்வீக சொத்து என்றால் மட்டுமே அதில் பேத்திக்கு பங்கு உண்டு.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |