கொள்ளி வைத்தவருக்கு சொத்தில் பங்கு இருக்கிறதா.!
தொப்புள் கொடி உறவாக இருந்தாலும் சொத்து என்று வரும் போது பகையாளியாக மாறிவிடுகிறார்கள். அதிலும் வீட்டில் அம்மா அல்லது அப்பா இறந்து விட்டால் சொத்து என்னென்ன இருக்கிறது, சொத்தை பங்கு பிரிக்க வேண்டும் என்று ஒரு போராட்டமாக இருக்கிறது. அதனால் தான் சொத்தை பற்றிய தகவலை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கொல்லி வைத்தவருக்கு சொத்தில் உரிமை இருக்கிறதா என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
அப்பா சொத்து மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம்
கொள்ளி வைத்தவருக்கு சொத்தில் உரிமை உண்டா.! இல்லையா.!
வீட்டில் அம்மா இறந்தால் மூத்த மகனும், அப்பா இறந்தால் கடைசி பிள்ளையும் கொள்ளி வைப்பார்கள். பிள்ளைகள் இல்லாத வீட்டில் நெருங்கிய உறவினர்கள் கொள்ளி வைப்பார்கள். மேலும் மகன்கள் இல்லாத வீட்டிலும் நெருங்கிய உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பெண் பிள்ளைகளே இறுதி சடங்குகளை செய்கிறார்கள்.
ஆண் பிள்ளை இல்லாதவர்களுக்கும், பிள்ளைகள் இல்லாதவர்களும் இறந்தால் நெருங்கிய உறவினர் அல்லது யார் கொள்ளி வைக்கிறார்களோ அவர்களுக்கு சொத்தில் உரிமை இருக்கிறதா என்ற சந்தேகம் வரும். சட்டத்தில் யார் கொள்ளி வைக்கிறார்களோ அவர்களுக்கு எந்த வித தனி சலுகையும் வழங்கப்படுவதில்லை. கொள்ளி வைப்பது என்பது அவர்களின் விருப்பம், இவர்களுக்காக சொத்தில் தனி பங்கு கிடையாது.இறந்தவர்கள் யாருக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு தான் சொத்தில் உரிமை இருக்கிறது.
தொடர்புடைய பதிவுகள் |
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..? |
தாத்தா சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..? |
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |