அக்கா சொத்தில் தங்கைக்கு பங்கு உண்டா..?

Advertisement

Does The Younger Sister Have a Share in The Older Sister’s Property in Tamil 

நண்பர்களே உங்கள் வீட்டில் சொத்து பிரச்சனை உள்ளதா..? அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் வீட்டில் பிரச்சனை உள்ளதா..? ஒரு சொத்து பிரச்சனை இருந்தாலும் அதனை தீர்ப்பதற்கு முக்கியமாக நாம் செல்லும் இடம் தான் கோர்ட். நமக்கு சொத்தில் பங்கு உண்டு என்று தெரிந்துகொண்டு வழக்குக்கு தொடந்தால் தான் கோர்ட்டில் வழக்கு உங்கள் பக்கம் சாதகமாக அமையும். அதனை விட்டுவிட்டு நமக்கு பங்கு இல்லாத சொத்தை கேட்டு வழக்கு தொடர்ந்தால் நமக்கு சாதகமாக அமையாது..!

அக்கா சொத்தில் பங்கு தங்கைக்கு பங்கு உள்ளதா..?

இப்போது அனைவரும் யோசிக்கலாம். அண்ணன் சொத்தில் பங்கு கேட்டு பார்த்திருக்கிறோம். இது என்ன அக்கா சொத்தில் பங்கு கிடைக்குமா என்று கேள்வியாக இருக்கும்.

பொதுவாக அண்ணன் சொத்து என்றால் அது அப்பா அல்லது தாத்தா சொத்தை தான் குறிப்பிடுவார்கள். ஆனால் அண்ணன் சொந்தமாக உழைத்து அதனை அவருடைய பெயரில் வைத்துக்கொண்டால் அந்த சொத்தை யாருக்கும் கொடுக்க வாய்ப்பு இல்லை. அவர் ஆசைபடும் நபருக்கு மட்டுமே இந்த சொத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.

ஆனால் அக்கா சொத்தை எப்படி கேட்க முடியும்..! அக்கா சொத்து என்றால் அது அவருடைய கணவர் சொத்து. அதனை கேட்க முடியாது. அதில் எந்த உரிமையும் தங்களுக்கு இல்லை. ஆனால் அக்கா சொந்தமாக சம்பாரித்து அதில் உரிமை கோர முடியும். அது எப்படி முடியும் என்பதை பார்க்கலாம்.

உங்களுடைய அக்கா திருமணம் ஆகாமல் அல்லது திருமணம் ஆகி விவாகரத்து செய்துவிட்டார் என்று வைத்து கொள்வோம். அவர் உழைத்து சேர்த்த சொத்துக்கள் அக்கா பெயரில் இருந்தால், உங்கள் அக்கா இறந்துவிட்டார் என்றால் அந்த சொத்துகள் அனைத்தும் குழந்தைகள் இருந்தால் அனைத்தும் குழந்தைகளுக்கு போகும். அல்லது அவருடைய சொத்துகள் அனைத்தும் தந்தை தாய்க்கு போகும் வாய்ப்பு உள்ளது.

 அப்படி யாரும் இல்லாதபட்சத்தில் அவருடைய  தங்கைக்கு சொத்துகள் கிடைக்கும். அதுவும் அக்கா அந்த சொத்துக்களை யாருக்கும் உயில் எழுதாத பட்சத்தில் தான் கிடைக்கும்.  

அம்மாவின் நகை மகனுக்கா மகளுக்கா  யாருக்கு சொந்தம் 

அம்மாவின் சொத்தை யார் உரிமை கொண்டாட முடியும்

அப்பா சொத்து மகனுக்கா  மகளுக்கா  யாருக்கு சொந்தம்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement