டால்பின் ஒரு கண்களால் மட்டுமே தூங்குமா? இதைவிட நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க

Advertisement

டால்பின் பற்றிய தகவல்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் டால்பின் பற்றிய தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக அனைவர்க்கும் தெரிந்திருக்கும். இது நீரில் வாழக்கூடிய ஒரு பாலூட்டி உயிரினம் ஆகும். இதை அதிகமாக பார்த்திருக்க மாட்டீர்கள். அப்படி பார்த்தாலும் அதனை பற்றிய சில உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? அது சில விஷயங்கள் மற்ற உரியிரினம் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக செய்யுமாம். வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Dolphin Secrets in Tamil:

டால்பின் புத்திசாலி ஆகும். மனிதனுக்கு முதலிடம் என்றால் டால்பினுக்கு தான் இரண்டாவது இடம் ஆகும். இதற்கு மேற்பட்ட அறிவு மேம்பாடு உண்டு, அதனால் இதற்கு சைகை மொழிகளை எளிதிலில் புரிந்துகொள்ள கூடியது. ஒலி மற்றும் ஒலி தகவலை ஈசியாக புரிந்துகொள்ள முடியும்.

♠  ஒரு டால்பினுக்கு விபத்து என்றால் மொத்தமாக அனைத்து டால்பின்களும் சேர்ந்து அந்த டால்பினை காப்பற்றுமாம்.

♠  பயிற்சியாளர்கள் சொல்லிக்கொடுக்கும் விஷயத்தை கற்றுக்கொண்டு டால்பின் மனிதனை போல் சொல்லிக்கொடுக்குமாம்.

♠  டால்பினுக்கு மனிதர்களை விட இரக்க குணம் அதிகம் இருக்குமாம். அதேபோல் மனிதனை போல் டால்பின்களுக்கு நடிக்கவும் தெரியுமாம்.

♠  டால்பின்கள் முதலில் நிலத்தில் வாழ்ந்தது என்றும் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் வாழ தொடங்கியது என்றும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

♠  டால்பின்களுக்கு இரண்டு இரைப்பை உண்டு ஒன்றில் உணவுகளை சேகரிக்கும், மற்றொன்றில் உணவை செரிமானம் செய்வதற்கும் பயன்படுத்துமாம்

♠  தண்ணீரில் 1000 அடிவரை செல்லகூடியது டால்பின்கள் ஆகும். டால்பின்களுக்கு 234 பற்கள் உள்ளது இருந்தாலும் அது உணவுங்களை அப்படியே முழுகுமாம்.

டால்பின்களுக்கு  வாழ்நாள் 17 ஆண்டுகள் இருந்தாலும் சிலவகையான டால்பின்கள் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது ஆகும்.

♠  தண்ணீரில் சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்த கூடியது.  அதனை விட சில நேரங்களில் வேகமாக செல்லுமாம்.

♠  டால்பின்கள்  மற்ற டால்பின்களை விசில் சத்தம் மூலம் பெயர் வைத்து அழைக்குமாம்.

♠  டால்பின்கள் மற்ற உயிரினத்தை போல் இரண்டு கண்களையும் மூடி தூங்காதாம், அப்படி தூங்கினால் அதன் மூளை செயல்படாதாம்.

♠  அதேபோல் அதற்கு இரண்டு கண்களையும் மூடினால் மூச்சு திணறல் ஏற்படுமாம். அதனால் அது இறக்கும் நிலை கூட வருமாம். இது தூங்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியை மட்டுமே தூங்க அனுமதிக்கும் வலது மூளை உறங்கினால் இடது கண் திறந்திருக்கும் இது போன்று தான் கண்களை மாற்றி மாற்றி தூங்க வைக்குமாம்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉👉 பென்குயின் பற்றிய தகவல்கள்

 

மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Interesting Information
Advertisement