கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை..! Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme..!

Advertisement

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்..!

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை 2023 – Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme:- வணக்கம் இன்று நாம் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் பற்றிய விவரங்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய கர்ப்பிணி தாய்மார்கள் பயனடையலாம். மேலும் இந்த திட்டத்தில் அனைத்து ஏழை கர்ப்பிணி பெண்களுக்கும் இரண்டு பிரசவங்களுக்கு ஐந்து தவணைகள் மூலம் ரூ.12,000/- முதல் ரூ.18,000/- ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. சரி இந்த திட்டம் பற்றிய விவரங்களை இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

new கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்:-

maternity benefit scheme

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12,000/- ரூபாயிலிருந்து ரூ.18,000/- ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது.

இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூபாய் 18,000/- வழங்கப்படுகிறது. மேலும் ரூ.4,000/- மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

newஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி?

இத்திட்டத்தில் உதவி பெற இருக்க வேண்டிய தகுதிகள் / Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme:-

  1. கருவுற்ற பெண்ணின் வயது 19 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
  2. கருசிதைவிற்கோ, கருக்கலைப்பிற்கோ உதவி தொகை வழங்கப்படாது.
  3. தாய் மரணம் அடைந்து விட்டால் குழந்தை பாதுகாவலருக்கு உதவி தொகை வழங்கப்படும்.
  4. குழந்தை இறந்து பிறந்தாலோ அல்லது பிறந்தவுடன் இறந்து விட்டாலோ தாய்க்கு உதவி தொகை வழங்கப்படும்.
  5. தமிழ்நாட்டில் வசிக்கும், இலங்கையில் புலம் பெயர்ந்த கர்ப்பிணி பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
  6. தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் – விவசாயிகள் (சமூகப்பாதுகாப்பது மற்றும் நலம்) திட்டத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியானவர்கள். மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் நிதிஉதவி வழங்கப்படுகிறது.
  7. அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் / ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் மகப்பேறு நிதியுதவி பெற விண்ணப்பித்தவர்கள் அமைப்பு சாரா தொழிலார்கள் நலவாரியம் அல்லது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் தடையில்லா (No Objection Certificate) சான்றுதலை பெற்று, தமிழக அரசு மூலம் வழங்கப்படும் மகப்பேறு நிதி, கர்ப்பிணித்தாய்மார்கள் ஏதாவது ஒரு துறை மூலம்  மட்டுமே நிதி உதவி பெற முடியும்.

இந்த திட்டத்தில் பயன் பெற நிபந்தனைகள்:-

  1. களப்பணியாளர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
  2. PICME எண் பெற வேண்டும்.
  3. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளிகள் பெயரில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.

dr. muthulakshmi reddy maternity benefit scheme

மேலும் முழுமையான விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்
OFFICIAL NOTIFICATION 

 

newஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement