நாணயங்கள் கனவில் வந்தால் என்ன பலன்..! இங்கே தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

Dreaming of Coins and Paper Money in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று நான் கனவு பலன் குறித்த பதிவை பதிவிடுகின்றேன். அதாவது நமது கனவில் நாணயங்களை கண்டால் என்ன பலன் என்பது குறித்த தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். கனவு என்பது நமது ஆழ்ந்த தூக்கத்தில் வரும் ஓன்று.

நம் மனதில் அதிகமாக எதை நினைக்கின்றோமோ அது தான் நமது தூக்கத்தில் கனவாக பிரதிபலிக்கும். சில கனவுகள் நாம் தூங்கி எழும் போது அது நினைவில் வராது ஆனால் சில கனவுகள் மட்டும் தான் நினைவில் இருக்கும் ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது. அந்த வகையில் உங்கள் கனவில் நாணயங்கள் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

நாணயங்கள் கனவில் வந்தால் என்ன பலன்: 

coins

பொதுவாக நமது கனவில் நாணயங்களை கண்டால் அதற்கு என்ன அர்த்தம் என்றால் நமக்கு கிடைக்க இருக்கும் நல்ல ஆதாயங்களை பற்றியும் வரும் பணம் பெருக்கத்திற்குரிய நல்ல சந்தர்ப்பங்கள் வரவிருப்பதையும் உணர்த்துகிறது.

தங்க நாணயங்களை கையில் வைத்திருப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவர்களுக்கு நல்ல நிதி நிலைமை அதாவது நல்ல பணம் வரவுகள் உள்ள காலமாகவும் ஏதோ ஒரு பொருளை பேரம் பேசி வாங்கவிருப்பதையும் உணர்த்துகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நண்பர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்..

பழமையான நாணயங்களை கனவில் கண்டால் கனவு காண்பவர்களுக்கு ஒரு நிலையான வருமானம் இருக்க வேண்டும் என அதற்காக முயற்சிப்பதையும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்ல செல்வவளம் கிடைக்க விருப்பதையும் ஆனால் அதனை சரியான முறையில் கவனமாக பணம் முதலீடு செய்வதால் நல்ல ஆதாயம் கிடைக்கும் எனவும் உணர்த்துகிறது.

நனையங்களை ஒவ்வொன்றாக கண்டு எடுப்பதை போல் கனவு கண்டால் கனவு காண்பவர்களுக்கு வரவிருக்கும் கவலைகளை பற்றி குறிக்கும். அதோடு சிறிது ஆதாயம் கிடைப்பதையும் உணர்த்துகிறது.

நனையங்களை சேகரிப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவரின் தோழனுக்கோ தோழிக்கோ திருமணம் நடக்கவிருப்பதையோ அல்லது உறவினர்களுக்கு திருமணம் நடக்க விருப்பதையோ குறிக்கிறது. மேலும் இந்த கனவு காண்பவர் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியதையும் இந்த கனவு உணர்த்துகிறது.

மிக சிறிய நாணயத்தை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் சிறிய சிறிய பிரச்சனைகளை குறிக்கிறது.

மிக பெரிய அழகிய நாணயங்களை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு மிக சிறிய அளவில் பணம் ஆதாயம் இருப்பதாய் குறிக்கிறது. மேலும் பெரிய திட்டங்களை வகுத்து புதிய தொழில் தொடங்குவதை குறிக்கிறது.

காகித பணத்தையும், நாணியத்தையும் கனவில் கண்டால் கனவு காண்பவர் தன்னை சுற்றி உள்ளவர்களை விட பணம் அதிகமாக இருக்க வேண்டும் என ஆர்வமுடன் அதனை அடைய முயற்சிக்க இருப்பதாய் குறிக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீடு பற்றிய கனவு கண்டால் என்ன பலன்

எளிதாக கிடைக்காத அழகிய நாணயத்தை கனவில் கண்டால் அந்த கனவை காண்பவர் தனது திட்டத்தை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட பணம் தேவைப்படுவதை குறிக்கிறது.

நிறைய நாணயங்களை கனவில் காண்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவர் ஏதோ ஒரு காரியத்தில் வெற்றியடைய நிறைய முயற்சி எடுப்பதை குறிக்கிறது.

வெள்ளி நாணயத்தை கனவில் கண்டால் கனவு காண்பவர் எதிர்பாராத விதமாக வெளியூர் செல்ல இருப்பதையும், பிறர் கனவு காண்பவருக்கு எதிராக சூழ்ச்சி செய்ய இருப்பதையும் அதனை கனவு காண்பவர் சாமர்த்தியமாக அதை தடுப்பதையும் உணர்த்துகிறது.

பயன்பாட்டில் இல்லாத பழைய நாணயங்களை கனவில் கண்டால் கனவு காண்பவர் எப்போதும் பழைய விஷயங்களை எண்ணிக்கொண்டே இருக்கவிருப்பதையும், பழைய சம்பவங்களை மறக்கவும் அறிவுறுத்துகிறது.

பயன் தராத மாற்ற முடியாத நாணயங்களை கனவில் கண்டால் கனவு காண்பவரை யாரோ வஞ்சகம் செய்து ஏமாற்றவிருப்பதையும், ஆக கவனமாக இருக்கவும் அறிவுறுத்துகிறது.

தங்க நாணயம் கிடைப்பது போலவோ அல்லது பார்ப்பதை போலவோ கனவு கண்டால் கனவு காண்பவர் காண்பவருக்கு அதிக ஆதாயம், எதிர்பாராத விதமாகவோ அல்லது பரம்பரியமாக உள்ள இதுவரை அறியாத பொருள் கிடைக்க இருப்பதை குறிக்கிறது.

வெளிநாட்டு நாணயத்தை கனவில் கனவில் கண்டால் அந்த கனவை காண்பவர் தனக்கு மிகவும் விருப்பமான வெளியிடங்களுக்கு அல்லது வெளியூர்களுக்கு ஒவ்விற்காக சென்று வரவிருப்பதை குறிக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நாய் கடிப்பது போல கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா..?

செப்பு நாணயங்களை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு பல விஷயங்களில் தற்பொழுது அதிர்ஷ்டம் வராது ஆனால் தன் வாழ்வில் அன்புக்குரியவர் கிடைப்பதில் அதிர்ஷ்டம் அதில் வெற்றியும் கிடைத்து அவரே வாழ்கை துணையாக கிடைக்க இருப்பதை குறிக்கிறது.

இரும்பு நாணயங்களை கனவில் கண்டால் கனவு காண்பவர் மிகவும் பொறுமையுடன் இருக்க அறியுறுத்தியும் நினைத்த காரியங்கள் தற்பொழுது நடக்காமல் போகவிருப்பதையும் ஒரு சிறிய நிலைத்த வருமானம் வந்துகொண்டிருப்பதையும் உணர்த்துகிறது.

நாணயத்தை கையில் இருந்து தூக்கி எறிவது போல் கனவு கண்டால் கனவு காண்பவரை எதை தேர்ந்தெடுப்பது என வாழ்வில் எல்லா காரியங்களிலும் குழம்பிக்கொள்ள இருப்பதையும், எதை தேர்ந்தெடுத்தாலும் பிறருக்காக சில விஷயங்களை விட்டுக்கொடுத்து வரவிருப்பதையும் உணர்த்துகிறது.

வானத்தில் இருந்து நாணயங்கள்  மழை கொட்டுவது போல் கனவு காண்டல் கனவு காண்பவருக்கு எதிர்பாராத விதமாக ஆதாயம் வரவிருப்பதை உணர்த்துகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement