வெறும் 55,000 ரூபாய்க்கு இவ்வளவு அம்சம் நிறைந்த ஸ்கூட்டரா.!

Advertisement

E-ஸ்பிரிண்ட்டோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 

ஒரு காலத்தில் பெரும்பாலானவர்கள் வீட்டில் சைக்கிள் தான் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் எல்லாரும் வீட்டிலும் வண்டி தான் உள்ளது. ஒரு வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் 5 பேரும் வண்டி வைத்திருக்கிறார்கள். ஒருத்தர் ஸ்கூட்டி வைத்திருப்பார்கள். இன்னொருவர் பைக்,  இன்னொருவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்திருப்பார்கள். இது போல எத்தனை வண்டி வைத்திருந்தாலும் அதனால் தம்முடைய பைனல் முழுவதும் பயன்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் அடுத்தடுத்து ஏதாவது மாடல் வந்தால் அதனை பயன்படுத்த வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் இ-ஸ்ப்ரின்ட்டோ புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

என்னென்ன ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது:

இ-ஸ்ப்ரின்ட்டோ ஆனது இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுப்படுத்தியுள்ளது. Rapo மற்றும் Roamy  என்ற இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Rapo பற்றிய விவரம்:

E-ஸ்பிரிண்ட்டோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 

இ-ஸ்ப்ரின்ட்டோ Rapo ஆனது 840 மில்லி மீட்டர் நீளமும், 720 மில்லி மீட்டர் அகலமும் 1150 மில்லி மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இதில் லித்தியம் லீட் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. சிறிதளவிலான ஆட்டோ கட்ஆஃப் சார்ஜர் உள்ளது.

மேலும் 250W BLDC ஹப் மோட்டாரை IP65 வாட்டர் ப்ரூஃப் வசதியை வழங்குகிறது.  ராபோ அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கலாம். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும்.

இந்த ஸ்கூட்டர் ஆனது சிவப்பு, நீலம், சாம்பல், கருப்பு மற்றும் வெள்ளை போன்ற நிறங்களில் கிடைக்கும்.

Roamy பற்றிய விவரம்:

E-ஸ்பிரிண்ட்டோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 

Roamy  1800 மிமீ நீளம், 710 மிமீ அகலம் மற்றும் 1120 மிமீ உயரமம் கொண்டுள்ளது. இதில் லித்தியம் லீட் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இதில் 25 KMPH வேகத்தில் பயணிக்கலாம். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும்.

250W BLDC ஹப் மோட்டாரை IP65 வாட்டர் புரூப் வசதியுடன் வருகிறது. இவை 150 எடை உள்ளவற்றை வைத்து பயணம் செய்யலாம். இதில் நீலம், கருப்பு, சாம்பல், வெள்ளை, சிவப்பு  போன்ற நிறங்களில் கிடைக்கும்.

இரண்டு ஸ்கூட்டரிலும் உள்ள அம்சம்:

இரண்டு ஸ்கூட்டர்களிலும் ரிமோட் லாக்/அன்லாக், ரிமோட் ஸ்டார்ட், இன்ஜின் கில் சுவிட்ச்/சைல்ட் லாக்/பார்க்கிங் மோட் மற்றும் USB-அடிப்படையிலான மொபைல் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

விலை எவ்வளவு:

ரூ. 55,000 மற்றும் ரூ. 63,000 ரூபாய் இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலையாக இருக்கிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement