நா பிறழ் வார்த்தைகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நா பிறழ்வது உள்ளது. அதாவது சில வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறுவது. இந்த மாதிரியான நா பிறழ்வதை தடுக்க தொடர் பயிற்சி இருந்தால் போதும். நமது உச்சரிப்பு சரியாக இருக்கும். அந்த வகையில் இன்று ஒரே மாதிரியான உச்சரிக்கக்கூடிய சொற்களைக் கொண்ட வாக்கியம் தான் நாம் நா பிறழ் சொற்கள் பார்க்க போகின்றோம். இந்த ஒரே மாதிரியான உச்சரிப்பை கொண்ட வார்த்தைகளை தான் நா பிறழ் வார்த்தைகள் என்று அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் Tongue Twister என்று கூறுகின்றனர். இந்த Tongue twister சொற்களை மிக வேகமாக சொல்வது மூலம் உங்களுக்கு நா பிறழ்வதை எளிமையாக தடுக்கலாம். இன்றைய பதிவில் சில நா பிறழ் வார்த்தைகளை தெரிந்துகொள்ளவோம் வாருங்கள்.
Easy Tongue Twisters in Tamil:
- காக்கைக்கு ஆகா கூகை
கூகைக்கு ஆகா காக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக்
கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
2. கொழுத்த மழையில் வாழை தோப்பை எட்டி பார்த்த
பழுத்த கிழவி இலை வழுக்கி கீழே விழுந்தாள்
3. வட்டமான பட்டம் விட்டான்
தட்டையான குட்டை பையன்
4. நம்ம தோசை நல்ல தோசை
தச்சன் தோசை தீஞ்ச தோசை
5. மலவாழை பறிக்க
மலை ஏறி வழி மாறி
உருமாறி வந்தாள் சிங்காரி
6. கோரை புல்லில் தேரை இருந்தால்
சாரை பார்த்து சீரும்
சீரும் சாரை கீறி பார்க்க
தேரை விட்டு ஓடும்
7. துளி துளி பனித்துளி
கிளி கிளி பசுங்கிளி
களி களி கண்டு களி
விழி விழி கரு இழி
8. லாரி நிறைய இறாலு
அதுல நாலு இறாலு
நாறுன இறாலு
9. நுங்கை பங்கு போட்டு தின்ன
அங்கும் இங்கும் ஓடினான்
தங்கை வந்ததும் எங்கும் நிற்காமல்
கிடங்கு பக்கம் ஓடினான்
10. புட்டும் புது புட்டு தட்டும் புது தட்டு
டக்கென புட்டை தின்ன
சிட்டாய் பறந்து வா..
11. ஒரு கை எடுக்கமறு கை கொடுக்க பிற கை மடக்க பல கை அடக்க வடக்கே போனான் கடுக்கன்
12. தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி..
துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி
13. பனைமரம் ஏறி பனங்காய் பறித்து தள்ளுவண்டி செய்து தள்ளிக்கிட்டு போனான்.
14. மருமகள் மாமியார் கிட்ட நான் தான்டி
உனக்கு மாமியார்ன்னு சொன்னாளாம்
மருமகள் மாமியார் ஆகியும் மாமியார்
மருமகள் ஆகியும் மாமியார் மருமகள்
சண்டை ஓயலையாம்.
15. சரக்கு ரயிலைக்
குறுக்கு வழியில்
நிறுத்த நினைத்த
முறுக்கு மைனர்
சறுக்கி விழுந்தும்
முறுக்கு மீசை இறங்கவில்லை.
16. கொக்கு நெட்டக் கொக்கு,
நெட்டக் கொக்கு
இட்ட முட்டை கட்ட முட்டை.
17. ஒரு லாரி லாரி
இரண்டு லாரி லாரி லாரி
மூன்று லாரி லாரி லாரி லாரி
நான்கு லாரி லாரி லாரி லாரி லாரி
ஐந்து லாரி லாரி லாரி லாரி லாரி லாரி
ஆறு லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி
ஏழு லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி
எட்டு லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி
ஒன்பது லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி
பத்து லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி
18. பச்சை குழந்தை
வாழைப்பழத்திற்காக
விழுந்து விழுந்து அழுதது.
19. வண்டி சிறியது,
வண்டிக்காரன் புதியது.
வண்டிக்காரன் புதியதால்,
வண்டி சாய்ந்தது.
20. குன்றூரில் குடியிருக்கும் குப்புசாமி யின் குமரன் குப்பன்,
குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்
குதிரையின் குட்டியை குச்சியால் குத்தினான்.
குதிரை குதியோ குதியேன்று குதித்தது.
நா பிறழ் பயிற்சி | Funny Tongue Twisters in Tamil
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |