வில்லங்க சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி? | EC Documents Download Online in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் ஒரு இடத்தினுடைய வில்லங்க சான்றிதழை ஆன்லைன் ஆன்லைனில் இலவசமாக எப்படி டவுன்லோட் செய்வது என்பது குறித்து தான் இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். அதற்கு முன்பு இந்த வில்லங்கம் சான்றிதழ் பற்றி அறிந்துகொள்வோம்.
வில்லங்கச் சான்று என்பது சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து வாங்க வேண்டும். ஒரு இடத்தை வாங்கும் போது நாம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பத்திரத்தை பதிவு செய்வோம். அவ்வாறு பதிவு செய்யும் தகவல்களை அவர்கள் சேமித்து வைத்துக்கொண்டு நாம் ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடம் தற்போது யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். இதில் பொதுவாக நாம் எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை வில்லங்க சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும். அந்த தேதியில் அந்த இடத்தை யார் விற்றுருக்கிறார்கள், யார் வாங்கி இருக்கிறார்கள் என்ற தகவல் அவர்கள் தருவார்கள். நீங்கள் கேட்ட தேதியில் யாரும் பதிவு செய்யவில்லை என்றால் பதிவு ஏதும் இல்லை என்றே வரும். தற்போது வில்லங்கச் சான்றிதழ் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே அறிவிக்கப்படுகிறது. ஆக இந்த வில்லங்கம் சான்றிதழை ஆன்லைனில் இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகிறோம். தகவலை தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படியுங்கள்.
வில்லங்க சான்றிதழ் ஆன்லைனில் இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி? – EC Documents Download Online in Tamil
ஒரு இடத்தினுடைய வில்லங்கம் சான்றிதழை ஆன்லைனில் டவுன்லோடு செய்வதற்கு தமிழக அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnreginet.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
பிறகு அவற்றில் மின்னணு சேவைகள் என்பதில் வில்லங்கம் சான்று விவரம் பார்வையிடுதல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது மேல் படத்தில் காட்ட்டப்பட்டுள்ளது போல ஒரு பக்கம் திறக்கப்படும் அவற்றில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளீடு சேர்க்க என்பதை கிளிக் செய்யுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பின்பு அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சா கோடினை உள்ளிட்டு தேடுக என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது ஒரு ஒப்புகை பக்கம் திறக்கப்படும். அதில் உங்களது திருத்த இயலாத நிலை ஆவண வடிவம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. திருத்த இயலாத நிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய என்று சிவப்பு நிறத்தில் லிங்க் இருக்கும் அதனை கிளிக் செய்தீர்கள் என்றால் உங்கள் வில்லங்கம் சான்றிதழ் டவுன்லோட் ஆகிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆன்லைன் மூலம் சிட்டா நகல் பெறுதல்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |