ஈல் மீன் பற்றி அறிந்துகொள்ளுங்கள் – Eel fish in tamil

Advertisement

விலாங்கு மீன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – Eel fish in tamil

ஹாய் மக்களே அனைவர்க்கும் வணக்கம்.. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகில் நிறைய வகையான உயிரினங்கள் இருக்கிறது.. அவற்றில் ஓன்று தான் மீன். மீன்களில் நிறைய வகையான மீன்கள் உள்ளது. அதாவது சாப்பிட கூடிய மீன் வகைகள், மீன் தொட்டியில் மட்டுமே வளர்க்க வேண்டிய மீன்கள், கடலில் மட்டுமே வாழக்கூடிய மீன்கள் என்று நிறைய வகையான மீன்கள் உள்ளது. அவற்றில் ஓன்று தான் விலாங்கு மீன் இதனை ஆங்கிலத்தி Eel Fish என்று அழைப்பார்கள். இந்த விலாங்கு மீன் குறைத்த சுவாரஸ்யமான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

ஈல் மீன்:Eel fish

இந்த விலாங்கு மீன் பொறுத்தவரை மீன் தொட்டியில் வளர்க்க கூடிய மீன் வகைகளும் உள்ளது. அதேபோல் சாப்பிட கூடிய மீன் வகைகளும் உள்ளது.

ஈல் மீன் பொதுவாக பார்ப்பதற்கு பாம்பு போன்ற உடல் அமைப்பும், கொக்கு போன்று முக அமைப்பு காணப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சால்மன் மீன் நன்மைகள்

இந்த விலாங்கு மீன்களில் விஷம் இருக்கிறதா என்று கேட்டால், இவற்றில் விஷம் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த மீன் கடித்துவிட்டது என்றால் ஒரு DT injection மட்டும் போட்டுக்கொள்வது மிகவும் சிறந்தது. ஏன் என்றால் மீன் கடித்த இடத்தில் வீக்கம் ஏற்படும் அதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்க ஒரே ஒரு DT injection மட்டும் போட்டுக்கொள்வது மிகவும் சிறந்து.

மேலும் இந்தனை நீங்கள் மீன் தொட்டியில் வைத்து வளர்க்குறீர்கள் என்றால் இந்த மீனை மட்டும் தான் தனியாக வளர்க்க வேண்டும். மற்ற மீன்களுடன் சேர்த்து வார்த்தால் இந்த விலாங்கு மீன் மற்ற மீன்களை சாப்பிட்டு வேண்டும்.

அதேபோல் மற்ற மீன்களுக்கு வழங்கும் உணவுகளை இந்த விலாங்கு மீனிற்கு போட்டால் அது கண்டிப்பாக சாப்பிடாது, இந்த மீன் பொதுவாக உயிருள்ள சிறிய மீன்கள் மற்றும் மாமிசத்தை மட்டுமே சாப்பிடும். குறிப்பாக இந்த மீன் பசியோடு இருக்கும் போது எத்தனை மீன்களை வேண்டுமானாலும் பிடித்து சாப்பிடுமாம். அதுவே அதற்கு பசி இல்லை ஏற்றல் ஒரு 10 நாட்கள் வரை சாப்பிடாதாம்.

இந்த விலாங்கு மீன் வளர்ப்பு என்பது ஒரு பெட் அனிமல் வார்க்கும் உணர்வை கொடுக்குமாம். இந்தியாவில் ஈல் மீன்கள் சுமார் 6 வகைகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த மீன் சுமார் 12 வருடங்கள் வரை உயிர் வாழும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மீனிற்கு வயதாக வயதாக இதனுடைய வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடுமாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மத்தி மீன் பயன்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement