கருணைக்கிழங்கினை சாப்பாட்டில் அதிக அளவு சேர்த்து கொள்வீர்களா..? அப்போ இதை கண்டிபாக தெரிஞ்சிகோங்க..!

Advertisement

Elephant Yam in Tamil

வணக்கம் நண்பர்களே..! நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதாவது நாம் அன்றாடம் பலவகையான உணவுப்பொருட்களை சாப்பிடுவோம். அவ்வாறு நாம் சாப்பிடு அனைத்து உணவு பொருட்களை பற்றிய முழுவிவரங்களும் உங்களுக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதேபோல் தான் நாம் அதிக அளவு சாப்பிடும் ஒரு உணவுப்பொருளான கருணைக்கிழங்கு பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். அதாவது அதன் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள், மற்றும் இதனை நாம் பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். அப்படி கருணைக்கிழங்கு பற்றி மேலே கூறியுள்ள தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் பரவாயில்லை. மாறாக உங்களுக்கு தெரியாது என்றால் இந்த பதிவை முழுதாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Elephant Yam Information in Tamil:

Elephant Yam Information in Tamil

கருணைக்கிழங்கு அல்லது பூமி சல்லரைக்கிழங்கு என அழைக்கப்படும் இது பூக்கும் தாவரவகையை சேர்ந்தது. மேலும் இது சேனைக்கிழங்கு வகைகளில் ஒன்று ஆகும். இந்த வகையான தாவரங்கள் பொதுவாக வெப்ப மண்டல காடுகளில் உற்பத்தி காய்கறிகள் ஆகும்.

மேலும் இது பசுபிக்குத் தீவுகள், தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல் இது ஒரு பணப்பயிர் ஆகும். இந்திய மாநிலங்களில் பீகார், மேற்கு வங்காளம், கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், மற்றும் மகாராசுட்டிரா, ஒரிசா போன்றவற்றில் பயிரிப்படுகிறது.

இந்த கருணைக்கிழங்கு தாவரத்தில் உருளையான தண்டு பகுதிகள் இருக்கும். அந்த தண்டுப்பகுதியில் கொத்து கொத்தாக பூக்கள் பூத்து இருக்கும். இந்த பூக்களில் இருந்து அழுகிய நாற்றம் மட்டுமே வீசும்.

இவற்றின் சூலம் கொண்ட பெண் பூக்களும் ஆண் பூக்களும் ஒன்றாகவே இருக்கும். மேலும் இவற்றின் கனிப்பகுதி சிவந்து காணப்படும்.

சவ்வரிசியை சாப்பிட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிவச்சிக்கோங்க

பிறப்பிடம்:

Elephant Yam Details in Tamil

இந்த கருணைக்கிழங்கின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசியா ஆகும். அதனால் இது தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டாலும் இந்தியா, இலங்கை, பிலிபைன்சு மற்றும் மலேசியா போன்ற உலக நாடுகளில் பயிரிடப்படுகிறது.

வேறுபெயர்கள்:

எலிபேண்ட் யாம் (Elephant Yam) என்று ஆங்கில மொழியிலும், கருணைக்கிழங்கு, காராக் கருணை, காரும் கருணை மற்றும் பூமி சல்லரைக்கிழங்கு என்று தமிழ் மொழியிலும் அழைக்கப்படுகிறது. மேலும் இது அமோர்போபள்ளஸ் பயனி போலியஸ் (Amorphophallus paeoniifolius) என்ற அறிவியல் பெயரிலும் அழைக்கப்படுகிறது.

கிராம்பினை உணவில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிவச்சிக்கோங்க

ஊட்டச்சத்துக்கள்:

கருணைக் கிழங்கில் கலோரிகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை போதுமான அளவு உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி6, வைட்டமின் பி1, ரிபோஃப்ளேவின், ஃபோலிக் அமிலம், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின்களும் கனிசமான அளவு உள்ளன.

பயன்கள்:

மூலநோய்க்கு சிறந்த சிகிச்சை அளிக்கின்றது.

உடலில் உள்ள கொலஸ்ட்ராலை ஒழுங்குபடுத்துகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயை வராமலும் தடுக்கின்றது.

புற்றுநோயைத் தடுக்க பயன்படுகிறது.

எடையை குறைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

பைன் பீன்ஸை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement