Eemperor Fish in Tamil
அசைவ பிரியர்களுக்கு மீன் என்றால் அவ்வளவு பிடிக்கும். மீன் வாங்கி வந்தாலே எப்போது சமைப்பார்கள், நாம் எப்போது அதனை சுவைக்கலாம் என்று ஆவலாக இருப்பார்கள். ஏனென்றால் அதனின் ருசியே அப்படி இருக்கும். சொல்லும் போதே மீன் சாப்பிடணும் போல் இருக்கிறதா.!
இந்த மீனில் பல வகைகள் உள்ளது, ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு ருசி கொண்டதாக இதுற்கும், நமக்கு ஒவ்வொரு மீனின் ருசிகள் எப்படி இருக்கும் என்று தான் தெரியும், அதனின் உடல் அமைப்பு, வேறு பெயர்கள் பற்றி எல்லாம் அறிந்திருக்க மாட்டோம். அதனால் தான் இந்த பதிவில் emperor மீனை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Emperor மீன் பற்றிய தகவல்:
ஆங்கிலத்தில் Emperor என அழைக்கப்படும் ஓரியா மீனானது ருசியான மீன் என்று கூறுகின்றனர். உடல் முழுவதும் சதைகளை உடையது. மற்ற மீன்களைப் போல முள் இல்லாமல் முதுகுத்தண்டு நடு முள் உடையதால் குழந்தைகளாலும் இந்த மீன் விரும்பப்படுகிறது. சிறிய அளவில் இருப்பதால் இவற்றை ஒரு கிலோ வாங்கினால் 20 மீன் வரைக்கும் இருக்கும்.
இந்த மீன்களில் பல வகைகள் இருக்கிறது, சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கலந்த மீனாகவும், மற்றொரு வகை மீன் ஆனது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மீன்கள் தான் ருசியாக இருக்கும்.
இந்த மீன் ஆனது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும் தன்மை உடையது. சிறு பாசி, நத்தை, மீன் குஞ்சுகள் இதன் உணவாகும். ஒரு மீனானது ஜந்து கிலோ வரையிலும் வந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இது சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கிறது, ஏனெனில் மீன்களில் மெலிந்த புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் இதயம் மற்றும் மூளைக்கு நன்மை பயக்கும் . அவை துத்தநாகம், இரும்பு மற்றும் பி வைட்டமின்கள் போன்ற தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களையும் வழங்குகின்றன.
நன்மைகள்:
இந்த மீனில் புரதசத்து நிறைந்திருப்பதால் இதய நோய், சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
இந்த மீனில் குறைந்த கலோரிகள் காணப்படுகிறது. மேலும் இதில் புரதசத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து நிறைந்துள்ளது.
மன ஆரோக்கியத்திற்கும் உகந்த மீனாக இருக்கிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |