வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குடியரசு தின எங்கள் தேசம் இந்தியா பாடல் வரிகள் | Engal Desam India Song Lyrics in Tamil

Updated On: January 20, 2025 6:48 PM
Follow Us:
engal desam india lyrics in tamil
---Advertisement---
Advertisement

எங்கள் தேசம் இந்தியா  பாடல் வரிகள் 

நமது இந்திய நாட்டில் ஆண்டு தோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. நமது இந்திய ஒரு குடியரசு நாடாக மாறிய நாள் ஜனவரி 26. இந்த தேசத்தின் வாழ்விலும், இந்த தேசத்தில் உள்ள மக்களின் வாழ்விலும் மிக முக்கிய நாள் இந்த ஜனவரி 26. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் குடியரசு தினம் கொண்டப்படுகிறது.

மேலும் இந்நாளில் பள்ளிகளில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி போன்றவை நடைபெறும். இதற்காக பலரும் தங்களை தயார் படுத்தி கொள்வீர்கள். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை போட்டி போன்றவை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் எங்கள் தேசம் பாடல் வரிகளை அறிந்து கொள்வோம்.

Engal Desam India Song Lyrics in Tamil:

இந்தியா இந்தியா
இந்தியா இந்தியா
எங்கள் தேசம் இந்தியா
இந்தியா இந்தியா

எங்கள் தேசம் இந்தியா
வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
வசந்த தேசம் இந்தியா
இந்தியா… இந்தியா…

கோடுகளால் வரைகின்ற
தேசம் அல்ல இந்தியா
கொள்கைகளால் வரைகின்ற
தேசமடா இந்தியா

மூன்று பக்கம் கடல் கொண்ட
தேசம் அல்ல இந்தியா
நான்கு பக்கம் புகழ் கொண்ட
தேசமடா இந்தியா

வேறு வேறு மொழிகள் கூடி இங்கு
விரும்பி நின்ற போதிலும்
நூறு கோடி நாவில் பேசும்
நல்ல ஒற்றை வார்த்தை இந்தியா

இந்தியா இந்தியா
இந்தியா இந்தியா

மேற்கு நாடு வேட்டையாட
கல் எடுத்த காலையில்
கல்குடைந்து சிலை வடித்த
கலையின் தேசம் இந்தியா

ஏனை மக்கள் மொழி படைக்க
இதழ் குவித்த வேளையில்
வான் வரைக்கும் இலக்கு எங்கள்
வரைந்த தேசம் இந்தியா

குடியரசு தின பாடல்கள்

காந்தி தேசம் இந்தியா
கட்கின் தேசம் இந்தியா
அக்னி தேசம் இந்தியா
அகிம்சை தேசம் இந்தியா

மானம் வீரம் கல்வி காத்த
ஞான பூமி இந்தியா
இமயமாக உயரமாக
எழுந்து நிற்கும் இந்தியா

கண்டம் விட்டு கண்டம் தாண்டி
நாளை அண்டம் ஆளும் இந்தியா

இந்தியா இந்தியா
இந்தியா இந்தியா
எங்கள் தேசம் இந்தியா
இந்தியா இந்தியா

எங்கள் தேசம் இந்தியா
வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
வசந்த தேசம் இந்தியா
இந்தியா… இந்தியா…

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

குடியரசு தின வாழ்த்துக்கள் 

மேலும் பலவகையான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்–> pothunalam.com
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now