ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு

Advertisement

ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு எழுதுக | Erode Tamilanban Kurippu in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு (Erode Tamilanban Kurippu in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். ஈரோடு தமிழன்பன் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அவரை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவில் ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு பற்றி கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் ஈரோடு தமிழன்பன் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Erode Tamilanban Asiriyar Kurippu in Tamil:

  • இயற்பெயர்- ஜெகதீசன்
  • பெற்றோர்கள் – நடராஜன் மற்றும் வள்ளியம்மாள்
  • பிறந்த ஊர் – சென்னிமலை (ஈரோடு மாவட்டம்)
  • பிறந்த வருடம்- 28.09.1940
  • புனைப்பெயர்: விடிவெள்ளி
  • சிறப்பு பெயர்: மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர்.

ஈரோடு தமிழன்பன் ஒரு ஒரு தமிழக கவிஞர் ஆவர். இவர் ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் என பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர் ஆவர்.

ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு

ஈரோடு தமிழன்பன் பிறப்பு:

தமிழன்பன் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை என்ற ஊரில் செ.இரா.நடராசன்- வள்ளியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சாந்தகுமாரி என்னும் பெண்ணை மணந்தார். இவருக்கு பாப்லோ நெரூதா, பாரதிதாசன் என இரு மகன்கள் உள்ளார்.

இராமலிங்க அடிகளார் ஆசிரியர் குறிப்பு..!

ஈரோடு தமிழன்பன் இயற்றிய நூல்கள்:

  • தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
  • சூரிய பிறை
  • ஊமை வெயில்
  • ஒரு வண்டி சென்ரியு
  • நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
  • நிலா வரும் நேரம்
  • தீவுகள் கரையேறுகின்றன
  • காலத்திற்கு ஒரு நாள் முந்தி
  • தோணி வருகிறது (முதல் கவிதை நூல்)
  • சிலிர்ப்புகள்
  • விடியல் விழுதுகள்
  • திரும்பி வந்த தேர்வலம்
  • மின்மினி காடுகள்
  • சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
  • பொதுவுடமை பூபாளம்
  • வணக்கம் வள்ளுவ
  • நெஞ்சின் நிழல்
  • நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்
  • அணைக்கவா என்ற அமெரிக்கா
  • சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்
  • ஓலைச்சுவடியும் குறுந்தகடும்
  • இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம்
  • பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா

நாமக்கல் கவிஞர் குறிப்பு

ஈரோடு தமிழன்பன் விருதுகள்:

வருடம்  விருதுகள் 
1973 தமிழன்பன் கவிதைகள் எனும் சிறந்த நூலுக்காகத் தமிழக அரசு வழங்கிய முதல் பரிசு
1991 தமிழக அரசு அளித்த பாரதிதாசன் விருது
1998 முரசொலி அறக்கட்டளை -கலைஞர் விருது
1999 தமிழக அரசு கலைமாமணி விருது
2000 பனி பெய்யும் பகல் எனும் சிறந்த கவிதை நூலுக்காகத் தமிழக அரசு வழங்கிய முதல் பரிசு
2001 தமிழக அரசு அளித்த குறள் பீட விருது
2002  கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழவேள் உமாமகேசுவரனார் விருது
2004 வணக்கம் வள்ளுவ! என்னும் கவிதை நூலுக்காகச் சாகித்திய அகாதெமி அளித்த விருது
2005 திராவிடர் கழகம் நல்கிய பெரியார் விருது
2010 தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்-விற்பனையாளர் சங்கம் (BAPASI) வழங்கிய கலைஞர் பொற்கிழி விருது
2011 கவிக்கோ விருது
2016  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய செம்மொழி ஞாயிறு விருது
2017  எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய பரிதிமாற்கலைஞர் விருது
2017 தினத்தந்திக் குழுமம் வழங்கிய சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement