விடுகதைகள் விடைகளுடன் | Eye Bell No 10 Sun Puzzle in Tamil..!
நாம் வாழும் வாழ்க்கை முதல் செய்யும் வேலை என இவை அனைத்தும் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லாமல் அப்படியே இருந்தால் அதில் பெரும்பாலும் எந்த விதமான மாற்றமும் இல்லாமலே இருக்கும். இப்படி இல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் பலரும் யோசிப்பார்கள். அந்த வகையில் வெறும் யோசனையோடு மட்டும் விட்டு விடாமல் இதற்கு அடுத்த நிலையாக நிறைய புதிர்களை எல்லாம் கண்டு பிடிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இத்தகைய முறையில் பார்க்கும் போதும் நாம் அனைவருக்கும் விடுகதை கேட்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. விடுகதை என்றேலே ஒரு தனி விதமான விறுவிறுப்பு இருக்கும். அதனால் இன்று தமிழில் விடுகதைகளுடன் கூடிய விடைகளையும் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தமிழ் விடுகதைகள் விடைகளுடன்:
- பெட்டியை திறந்தால் பூட்ட முடியாது அது என்ன தெரியுமா..?
விடை: தேங்காய்.
2. இவள் நிறம் சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன..?
விடை: அடுப்புக்கரி.
3. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மஹாராணி அது என்ன..?
விடை: முட்டை.
4. டாக்டர் வந்தாரு ஊசி போட்டாரு ஆனா மாத்திரை மட்டும் வாங்கல அந்த டாகடர் யார் தெரியுமா..?
விடை: கொசு.
5. நிலத்தில் நிற்காத செடி, தரையில் முளைக்காத செடி அது என்ன..?
விடை: தலைமுடி.
6. கையும் இல்லை, காலும் இல்லை, ஆனால் ஓடிக்கொண்டே இருப்பான் அவன் யார்..?
விடை: நேரம்.
7. தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன..?
விடை: அன்னாசிப்பழம்.
8. செய்தி வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே அது என்ன தெரியுமா..?
விடை: தொலைப்பேசி.
9.ஊர் ஊராய் சுற்றுவான் ஆனால் வீட்டிற்குள் மட்டும் நுழைய மாட்டான் அவன் யார்..?
விடை: செருப்பு.
10. எண்ணையை குடித்து விட்டு ஏழு கடல் தாண்டுவான் அவன் யார் தெரியுமா..?
விடை: விமானம்.
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்
11. கொதிக்கும் கிணற்றில் குதித்து குண்டாக வருவது என்ன..?
விடை: பூரி.
12. தாகம் தீர்க்கும் தண்ணீர் சோம்பு அந்தரத்தில் தொங்குது அது என்ன..?
விடை: இளநீர்.
13. சின்ன கதவுகள், லட்சம் முறை மூடி திறந்தாலும் ஓசை வராத கதவுகள் அது என்ன.?
விடை: கண் இமைகள்.
14.ஊரெல்லாம் ஒரே விளக்கு ஆனாலும் அதற்கு ஒரு நாள் மட்டும் விடுப்பு அது என்ன..?
விடை: சந்திரன்.
15. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை மட்டும் பின்னுவானாம் அவன் யார்..?
விடை: சிலந்தி.
16. ஊசி நுழையாத கிணற்றில் 1 படி தண்ணீர் அது என்ன.?
விடை: தேங்காய்.
17. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்..?
விடை: மணிக்கூடு.
18. யாரும் ஏற முடியாத மரம் கிளைகள் இல்லாத மரம் அது என்ன..?
விடை: வாழைமரம்.
19.எவர் கையிலும் சிக்காத கல், யாரினாலும் விற்க முடியாத கல் அது என்ன..?
விடை: விக்கல்.
20. ஆயிரம் பேர் அணிவதாலும் ஆரவாரம் இருக்காது அது என்ன..?
விடை: எறும்பு.
அறிவியல் விடுகதைகள் |
பாட்டி விடுகதைகள் |
புதிர் வினா விடைகள் |
கடினமான விடுகதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |