வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ்நாட்டின் சாதனை பெண்கள் பெயர்கள்

Updated On: February 8, 2024 5:38 PM
Follow Us:
female achievers in tamilnadu in tamil
---Advertisement---
Advertisement

Female Achievers in Tamilnadu in Tamil

ஆண்களுக்கு பெண்கள் சமம் என்பதை சாதனை படைத்த பெண்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அடிமைத்தனம் உள்ள அக்காலத்திலேயே ஆண்களுக்கு சமமாக பெண்களும் வளர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளார்கள். அப்படி சாதனை படைத்த பெண்களில் தமிழ்நாட்டை சேர்ந்த சிறந்த 5 பெண்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழகத்தில் பிறந்து பல்வேறு சாதனைகளை படைத்து, ஆண்கள் பெண்கள் இருவரும் சமம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்கள். சொல்லப்போனால், ஆண்களுக்கு மேலாக பல சாதனைகளை புரிந்துள்ளார்கள். அவர்கள் யார் என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

தமிழ்நாட்டின் சாதனை பெண்கள் பட்டியல்:

முத்துலட்சுமி ரெட்டி:

முத்துலட்சுமி ரெட்டி

முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1886 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி பிறந்தார். இவர் இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் ஆவர். ஆண்கள் கல்லூரியில் படித்த முதல் பெண் மாணவி என்ற பெருமை முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரை சேரும். இவர், மருத்துவத்தை தவிர சமூக நல செயல்பாடுகளிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். புற்று நோயாளிகளுக்காக நிதி திரட்டி லாப நோக்கற்ற புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்தை சென்னை அடையாறில் நிறுவியுள்ளார்.  முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்தது. முத்துலட்சுமி ரெட்டி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

இந்தியாவின் சாதனை பெண்கள் பட்டியல்

மூவலூர் ராமாமிர்தம்:

மூவலூர் ராமாமிர்தம்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள “பாலூர்” என்ற கிராமத்தில் 1883 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளரும் ஆவார். இவர் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். இப்படி இவரின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

வை. மு. கோதைநாயகி:

வை. மு. கோதைநாயகி

வை. மு. கோதைநாயகி அம்மாள் அவர்கள், 1901 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி பிறந்தார். இவர் தமிழகத்தை சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். அதுமட்டுமில்லாமல், துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளரும் இவரே ஆவர். 1925 ஆம் ஆண்டு காந்திஜியை ஆதரித்ததற்காக அவர் சிறைவாசம் அனுபவித்தார். வைதேகி, பத்மசுந்தரன் உள்ளிட்ட பல்வேறு பதிப்புகளை எழுதியுள்ளார். அவர் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று வாழ்ந்தார்.  இறுதியில் 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.

ரோஷினி நாடார்:

ரோஷினி நாடார்

ரோஷினி நாடார், ஒரு இந்திய பில்லியனர் தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் மற்றும் HCL டெக்னாலஜிஸ் தலைவர் ஆவார். இந்தியாவில் முன்னிலையில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் முதன்மையான பெண்மணிகளுள் ஒருவராவார். உலகின் சக்தி வாய்ந்த நூறு பெண்மணிகளுக்கான பட்டியலில் இவர் 55வது பட்டம் பெற்றார்.

இந்திரா நூயி:

இந்திரா நூயி

இந்திரா நூயி 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவர், பள்ளிப்படிப்பை டி நகரில் முடித்தார். பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு, மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் பொவேரி என்ற நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

கல்வியில் சிறந்த பெண்கள் பெயர்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now