Few Lines About Mattu Pongal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மாட்டு பொங்கல் பற்றிய 10 வரிகளை கொடுத்துள்ளோம். உழவனுக்கு உயிர் தோழனாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் விழா தான் மாட்டு பொங்கல். மாட்டு பொங்கல் தைத்திருநாளுக்கு அதாவது பெரும்பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படும் நாள் ஆகும். இது பட்டி பொங்கல் என்றும் கன்று பொங்கல் என்றும் கூறப்படுகிறது.
மாட்டு பொங்கல் அன்று, மாடுகளை குளிப்பாட்டி, அதற்கு மாலை அணிவித்து, அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி தீப ஆராதனை காட்டி, பொங்கல் படைத்து வழிப்படுவார்கள். கிராமப்புறங்களில் மாட்டு பொங்கல் மிக விமர்சியாக கொண்டாடப்படும். எனவே, மாட்டு பொங்கல் பற்றி நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
மாட்டு பொங்கல் பற்றி சில வரிகள்:
- மாட்டுப்பொங்கல் என்பது, தமிழர்களால் தைப்பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இது பட்டி பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.
- உழவுக்கு உயிரூட்டும் விதமாக விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளை போற்றி, அவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
- அதாவது, விவசாயத்திற்காக உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கல் பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும்.
- மாட்டுப்பொங்கல் அன்று வேளாண்மைக்கு உதவும் மாடுகளை குளிப்பாட்டி மாலை அணிவித்து, அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி, தீப ஆராதனை காண்பித்து வழிபடுவார்கள் செய்வார்கள்.
- மேலும், மாட்டு தொழுவத்தையும் சுத்தம் செய்து, அந்த இடத்தில் மாடு படங்களை வரைந்து, மாட்டு தொழுவத்திலும் சாம்பிராணி, தீப ஆராதனை காட்டுவார்கள்.
- அதன் பிறகு, சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் வைத்து, அதனுடன் பழ வகைகள் மற்றும் செங்கரும்பு வைத்து படைத்து, அதனை மாடுகளுக்கு ஊட்டி விடுவார்கள்.
- கிராமங்களில் ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி கையில் தட்டு தாளம் அடித்து , வீட்டினை மூன்று முறை சுற்றி வந்து வழிபாடுவார்கள்.
- அதேபோல், உழவுக்கு பயன்படும் கருவிகளையும் கழுவி சுத்தம் செய்து துடைத்து, குங்குமம், சந்தனம் வைத்து அவற்றிக்கு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்வார்கள்.
- கிராமங்களில் மத்தளம் அடித்து, மாடுகளை அனைத்தும், அந்த ஊரில் உள்ள குளம் அல்லது ஆற்றிற்கு அழைத்து சென்று குளிப்பாட்டி அங்கு பூஜை செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
- கிராமப்புறங்களில், வீடுகளில் மாடு இல்லாதவர்கள், அருகில் மாடு வைத்திருக்கும் வீடுகளுக்கு சென்று மாட்டு பொங்கலை கொண்டாடுவார்கள்.
ஆறு மாதம் அன்னையின் முளைப்பால் அருந்தினோம்… ஆயுள் முழுவதும் உந்தன் மடிப்பால் அருந்தினோம்… எங்களின் இரண்டாம் தாயும் நீயே… குடும்பம் செழிக்க உதவும் கோமாதாவும் நீயே… உன்னை வணங்கவே உனக்கொரு பண்டிகை.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |