அத்திப்பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Fig Fruit in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பொதுநலம்.காம் பதிவின் வயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள் அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். பொதுவாக இந்த உலகில் நாம் மிக மிக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். இப்படி நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக உள்ள உணவு பொருட்களை பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை.

அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், வகைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் அத்திப்பழத்தின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Fig Fruit Details in Tamil:

Fig Fruit Details in Tamil

அத்திப்பழம் அல்லது அத்தி என்பது மோராசியே என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ஃபிகஸ் சரிக்கா என்ற துணைப்பேரினத்தை சேர்ந்த ஒரு மரம் ஆகும்.

இம்மரம், சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதன் இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும்.

மேலும் அவை பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக இதனை பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

கிவி பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சிக்கணும்

வகைகள்:

அத்தியில்,

  1. நாட்டு அத்தி
  2. வெள்ளை அத்தி 
  3. நல்ல அத்தி என மூன்று வகை உள்ளது.

பிறப்பிடம்:

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பல ஆசிய நாடுகளில் வணிக ரீதியாக வளர்க்கப்படுகிறது.

வேறுபாடுகள்:

இது அத்தி என்று தமிழ் மொழியிலும், அதவம் என்று சங்க இலக்கியத்திலும், தெலுங்கில் அத்தி பள்ளு என்றும், மலையாளத்தில் அத்தி பழம் என்றும், இந்தியில் குலுர் அல்லது அஞ்சீர் என்றும், ஆங்கிலத்தில் ஃபிக் பிரூட் (Fig Fruit) அழைக்கப்படுகிறது.

உளுந்தினை அதிக அளவு சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சிக்கணும்

ஊட்டச்சத்துக்கள்:

Fig fruit benefits in tamil

100 கிராம் அத்திப்பழத்தில்,

  • கலோரி 74
  • கார்போஹைட்ரேட் 19.18 கிராம் 
  • புரதம் 0.75 கிராம்        
  • மொத்த கொழுப்பு 0.30 கிராம்       
  • கொலஸ்ட்ரால் 0 மி.கி
  • உணவு நார்ச்சத்து 2.9 கிராம்
  • ஃபோலேட்டுகள் 6 μg 
  • நியாசின் 0.400 மி.கி  
  • பாந்தோதெனிக் அமிலம் 0.300 மி.கி  
  • பைரிடாக்சின் 0.113 மி.கி  
  • ரிபோஃப்ளேவின் 0.050 மி.கி  
  • தியாமின் 0.060        
  • வைட்டமின் ஏ 142 IU       
  • வைட்டமின் சி 2 மி.கி
  • வைட்டமின் ஈ 0.11 மி.கி    
  • வைட்டமின் கே 4.7 μg                 
  • சோடியம் 1 மி.கி
  • பொட்டாசியம் 232 மி.கி     
  • கால்சியம் 35 மி.கி       
  • தாமிரம் 0.070 மி.கி  
  • இரும்பு 0.37 மி.கி    
  • மக்னீசியம் 17 மி.கி        
  • மாங்கனீசு 0.128 மி.கி  
  • செலினியம் 0.2 μg       
  • துத்தநாகம் 0.15 மி.கி    

பேஷன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதை பற்றி முழுதாக தெரிஞ்சிக்கோங்க

பயன்கள்:

அத்திப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடல் எடை சரியாக இருக்கும்.

மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகின்றது.

சர்க்கரை நோய்யாளிகளுக்கு உதவுகிறது.

அதேபோல் அத்திப்பழம் எலும்புகளை பலப்படுத்த பயன்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

உங்களுக்கு நெல்லிக்காய் பிடிக்குமா அப்போ இதை தெரிஞ்சிக்கமா இருந்தா எப்படி

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil

 

Advertisement