முதல் பட்டதாரி சான்றிதழ் | First Graduate
வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம். முதல் பட்டதாரி சான்றிதழ் யாரெல்லாம் வாங்கலாம், அதை எப்பொழுது வாங்க வேண்டும், முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க தவறியவர்கள் எப்பொழுது வாங்க முடியும், முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்குவதால் என்ன பயன் இருக்கிறது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
முதல் பட்டதாரி சான்றிதழ் யாருக்கு கிடைக்கும்:
முதல் பட்டதாரி என்பது குடும்பத்தில் யார் முதலில் பட்டம் பெறுகிறார்களோ..? அவரையே முதல் பட்டதாரி என்று கூறப்படுகிறது. முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அவர்களின் குடும்பத்தில் அப்பா அல்லது அம்மா அல்லது உடன் பிறந்தவர்கள் யாரும் டிகிரி படிக்கவில்லை என்றால் நீங்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் பெற முடியும். அப்படி யாராவது உங்கள் குடும்பத்தில் டிகிரி முடித்திருந்தால் உங்களால் முதல் பட்டதாரி சான்றிதழ் பெற முடியாது.
அதுமட்டுமில்லமல் உங்களின் தாத்தா, பாட்டி டிகிரி படித்திருந்தாலும் முதல் பட்டதாரி சான்றிதழ் பெற முடியாது. அதாவது, விண்ணப்பதாரர்கள் பட்டதாரி குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க கூடாது. அதேபோல் உங்கள் உடன்பிறந்தவர்கள் டிப்ளமோ (Diploma) படித்திருந்தாலும் உங்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் கிடைக்கும்.
முதல் பட்டதாரி சான்றிதழ் எப்பொழுது வாங்க வேண்டும்:
- +2 முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேரும் போது முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க முடியும். +2 முடித்த உடனே முதல் பட்டதாரி சான்றிதழ் பெற்றுக்கொள்வது அவசியம்.
- அதேபோல், முதல் பட்டதாரி சான்றிதழை டிகிரி முடித்தவர்கள் வாங்குவது என்பது கடினமான ஓன்று.
- முதல் பட்டதாரி சான்றிதழ் நேரடி முறையிலும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் பெற்று கொள்ளலாம்.
- முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு சரியான முகவரி மற்றும் மாற்று சான்றிதழ் இருக்க வேண்டும்.
- முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்காமல் தவறவிட்டவர்கள் அந்த சான்றிதழ் பெறுவது என்பது கடினமான ஒன்றாகும்.
இதையும் பாருங்கள் ⇒ ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி
முதல் பட்டதாரி சான்றிதழ் பயன் என்ன:
- கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது தான் இந்த உதவித்தொகை.
- நீங்கள் முதல் பட்டதாரியாக இருந்து சான்றிதழ் வைத்திருந்தால் உங்கள் படிப்பிற்காக உதவித்தொகை வழங்கப்படும்.
- முதல் பட்டதாரியாக இருந்தால் அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
- இந்த உதவித்தொகை அரசு கல்லூரிகளில் மட்டுமில்லாமல் தனியார் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |