உங்களின் ஆளுமை திறனை சோதியுங்கள்
ஒரு நபரின் ஆளுமைத் திறனை எதையெல்லாம் வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு பல அளவீடுகள் இருக்கின்றன. ஒரு நபரின் திறமையை அவரின் தோற்றத்தை வைத்து கணக்கிட கூடாது என்பர். இன்று உலக அளவில் கைரேகைகள் ஒருவரின் குண நலன்களை கண்டுபிடிக்க உதவுகின்றது என்று நம்புகின்றனர். உளவியல் ரீதியாக பல விதமான சோதனைகள் மூலம் ஒரு நபர் எப்படிபட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்களின் செயல்பாடுகளை உங்களின் பெயரின் முதல் எழுத்தை கொண்டு எளிதாக கண்டுபிடிக்க முடியும். அந்தவகையில் இன்று உங்கள் பெயரின் முதல் எழுத்தை கொண்டு அந்த பெயருக்கு உரியவரின் குணத்தை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்….
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
உங்கள் பெயரின் முதல் எழுத்தை கொண்டு ஆளுமையை கண்டுபிடிக்கலாம் வாருங்கள்….
A என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் குறிக்கோள் கொண்டவர், தைரியமானவர், தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் மற்றும் மனஉறுதியுடன் எல்லாவற்றையும் செயல்படுத்துவீர்கள். எல்லா விஷயங்களிலுமே நீங்கள் நடைமுறையில் சிந்திப்பவர். ஆனால் உங்களுடைய லாஜிக்கான அணுகுமுறை உங்கள் உறவை பாதிக்கும். உங்களுக்கு தலைமைத்துவப் பண்புகள் இயல்பாகவே இருக்கும். நீங்கள் உங்கள் விருப்பப்படியே தான் எல்லாவற்றையும் செய்வீர்கள். காதல் உறவைப் பொறுத்தவரை நீங்கள் நேராக பேசுவதையே விரும்புவீர்கள்.
B என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு பிரைவேட் நபர். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்புவீர்கள். வாழ்வில் என்ன வருகிறதோ அதை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வீர்கள். சொகுசாக வாழ பிடிக்கும், மற்றவர்கள் உங்களை பார்த்துக் கொள்வது உங்களுக்கு பிடிக்கும். புதிய இடங்கள், நபர்கள், அனுபவங்களை தேடிச் செல்வீர்கள். மற்றவர்களிடம் எளிதாகப் பழகுவீர்கள். சுயகட்டுப்பாடு அதிகம்.
C என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர், மற்றவர்களை ஊக்குவிப்பதில் சிறந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்களை நம்ப வைப்பதில் உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது. உங்கள் பேச்சு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும், சிறந்த பேச்சாளர்களாக இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களையும் தெளிவாக வெளிப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவர். தெளிவாக பேசுவீர்கள், பல்துறை வித்தகர் மற்றும் எதை எப்போது சொல்ல வேண்டும் எப்படி சொல்ல வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
D என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் நேர்மையான ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதை உங்கள் ஆளுமை வெளிப்படுத்துகின்றன. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அதே போல ஒழுக்கமான வாழ்க்கையைப் பின்பற்றவும், நெறிமுறைகள் தவறாமல் வாழவும் நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். உங்களால் கொஞ்சம் அகங்காரமாக இருக்க முடியும் என்றாலும், நீங்கள் அதை வெளிப்பட மாட்டீர்கள். உங்கள் கனவுகளை யதார்த்தமாக மாற்ற விரும்பும் ஒரு சாதாரண நபராக இருப்பீர்கள்.
E என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அதிக கற்பனைத் திறன் கொண்டவர். நீங்கள் உங்களுடைய கற்பனை உலகில் வாழ முயற்சி செய்கிறீர்கள். உங்களின் கற்பனை சக்தி, உங்களை படைப்பாற்றலில் சிறந்த நபராக இருக்க உதவுகிறது. நீங்கள் கலைஞர்கள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள், கலை, மீடியா போன்ற துறைகளில் சிறந்து விளங்குவீர்கள்.
F என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அக்கறையாக இருப்பீர்கள், அன்பாக, நேர்மையாக மற்றும், விசுவாசத்துடனும் இருக்க முடியும் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறீர்கள். இருப்பினும், உங்களிடம் மோசமான குணமும் உள்ளது. உங்களால் பொய்களை பொறுத்துக்கொள்ள முடியாது. உறவுகள், நட்புகள், வேலை என்று எல்லாவற்றிலும் முழு ஈடுபாடு காட்டுவீர்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்.
G என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கான வரிசையில் இருக்க முயற்சிப்பீர்கள். உங்களுக்கு எல்லாமே முழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும், நீங்கள் மற்றவர்களின் வேலையை செய்ய விரும்ப மாட்டீர்கள். நீங்கள் செய்ய விரும்பும் அனைத்திலும் முதன்மையாக இருக்க விரும்புகிறீர்கள். எல்லாரிடமும் இணக்கமாக இருக்க மாட்டீர்கள். தேர்வு செய்து பழகுவீர்கள்.
H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் கொடுக்கும் குணம் கொண்டவர். எல்லாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் உங்களுக்கு இருக்கும். பொதுவாக நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள். எல்லா விஷயங்களையும் நீங்கள் சுறுசுறுப்பாகவும் தைரியமாகவும் அணுகும் முறையைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் மன ரீதியாக மென்மையான நபராக இருக்கிறீர்கள். வேலை, வணிகம் என்ற தொழில் வாழ்க்கையில், நீங்கள் நடைமுறைவாதி, விடாமுயற்சியுடன், கடினமாக உழைத்து லட்சியத்தை நிறைவேற்றுபவர்.
I என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஆழமாக சிந்திப்பவர், அன்பானவர் மற்றும் பழகுவதற்கு இனிமையானவர். நீங்கள் அன்பு கொண்டவர்கள் மீது அக்கறையாக பார்த்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்வீர்கள். உறவுகள் மற்றும் கடமைகளை நீங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறீர்கள். வாழ்க்கைத்துணையின் மகிழ்ச்சி உங்களுக்கு மிகவும் முக்கியம். பொது வாழ்வில், எல்லாரிடமும் நீங்கள் எளிதாகப் பழகும் தன்மை கொண்டவர், சுதந்திரமான மனம் உடையவர், புதிய சாகசங்களை தேடி செல்வீர்.
J என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் செல்வாக்கு மிக்கவர், லட்சியவாதி, மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர். உங்களிடம் அதிக ஆற்றல் உள்ளது. காதல் மற்றும் உறவுகள் என்று வரும்போது கூட உங்கள் இலட்சியத்தை பின்பற்றுவீர்கள். வாழ்க்கையிலும் வேலையிலும் புதிய சவால்கள் இருப்பதை விரும்புவீர்கள். புதிய முறைகள், வழிகள் மற்றும் வழக்கத்துக்கு மாறான விஷயங்களை செய்வதில் ஈடுபாடு அதிகம்.
K என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மர்மமான நபர், உணர்ச்சிமிக்கவர மற்றும் வசீகரமாக இருப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை, அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமநிலையாக இருப்பதையே விரும்புகிறீர்கள். எனவே, நீங்கள் பல விஷயங்களை விட்டு விடுவீர்கள். காதல் மற்றும் உறவுகளில், விளையாட்டுப் போக்கு பிடிக்காது. தீவிரமாக இருந்தாலும், நீங்கள் கனிவான மனம் கொண்டவர், சுயநலமில்லாதவர்.
L என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், சொந்தமாக உங்கள் வழியில், உங்கள் முயற்சியில் நீங்கள் வாழ விரும்புகிறீர்கள். எல்லோரும் செய்கிறார்களே என்று நீங்களும் டிரெண்டிகை பின்பற்றவோ, நகலெடுக்கவோ அல்லது ஏதாவது பயிற்சி செய்யவோ விரும்ப மாட்டீர்கள். கவர்ச்சியான, வேடிக்கையான, மற்றும் உற்சாகமான செயல்களை விரும்பி செய்வீர்கள். உங்கள் உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். வாழ்க்கையிலும் வேலையிலும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், ஆபத்தான விஷயத்தை முன்னெடுத்து செய்வதற்கும் நீங்கள் எப்போதுமே ஆர்வமாக இருக்கிறீர்கள்.
M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் நம்பகமானவர் மற்றும் கடின உழைப்பாளி. நீங்கள் உங்கள் வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள். Workaholic என்று உங்களைக் குறிப்பிடலாம். நீங்கள் சொந்த விதிகளை கட்டமைத்து, கொள்கைகளுடன் உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். நீங்கள் எளிதில் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த மாட்டீர்கள்.
N என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் சுதந்திரமாக இருப்பதை விரும்புகிறீர்கள். கூட்டமாக ஒரு மந்தையைப் போல செயல்படுவது மற்றும் பின்தொடர்வது உங்களுக்குப் பிடிக்காது. நீங்கள் எதைச் செய்தாலும் உங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பாக செய்ய விரும்புவீர்கள். நீங்கள் அதிக கற்பனை திறன் மற்றும் உள்ளுணர்வு சக்தி கொண்டவர். மற்றவர்களை உங்களின் உரையாடல்கள் மூலம் வசப்படுத்டுவீர்கள். இருப்பினும், உறவுகள் என்று வரும்போது நீங்கள் அதிக உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.
O என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் நம்பகமானவர், இரக்கமுள்ளவர், மற்றும் உணர்ச்சிவசப்பதுபவர். உங்கள் குழந்தை மனம், ரசிக்க அனுமதிக்கும் செயல்களை நீங்கள் விரும்பி செய்வீர்கள். வேலையில், எல்லாமே சிறப்பாக, முழுமையாக செய்ய வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றுவீர்கள். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான இயந்திரம் போன்ற வாழ்க்கையை வாழ விரும்புவதில்லை. எல்லாரிடமும் நீங்கள் மிகவும் ஆர்வமாகவும் அன்பாகவும் இருக்கிறீர்கள். உங்களுக்கு கொஞ்சம் பொசசிவ்னஸ் அதிகம்.
P என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், உங்களுக்கு எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். நீங்கள் அனைவரிடம் எளிதாக பழகுவீர்கள். இலகுவாக பழகக்கூடிய நபர்களுடன், மகிழ்ச்சியாக இருப்பவர்களுடன் இருப்பதையே விரும்புகிறீர்கள். சமூகத்தில் உங்களுடைய நற்பெயரை காப்பாற்ற விரும்புகிறீர்கள். காதலைப் பொறுத்தவரை, அழகு எவ்வளவு முக்கியமோ, அதே போல புத்திசாலித்தனத்தையும் விரும்புகிறீர்கள். வாழ்க்கையிலும் வேலையிலும், உங்கள் இலக்குகளை அடைவதில் நீங்கள் மிகவும் பிடிவாதமாக செயல்படுகிறீர்கள்.
Q என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு புதிரான நபராகத் தான் பெரும்பாலும் வெளிப்படுவீர்கள். உங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்றாலும், நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்காக பலரும் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கு உங்களால் முடிந்ததை விட நீங்கள் அதிகமாக செலவிடுவீர்கள். 100% எதிர்பார்த்தால், நீங்கள் 150% வழங்குவீர்கள். காதலில், நீங்கள் உற்சாகமான நபராக, ஆற்றல் நிறைந்தவராக காணப்படுவீர்கள். இது அழகானதாக தெரிந்தாலும், சில நேரங்களில் உங்கள் பார்ட்னர் உங்களுக்கு இணையாக செயல்பட முடியாமல் கவலைப்படுவார்.
R என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் வெளிப்படையான நபர், திறந்த மனதுடன் அனைவரையும் அணுகுவீர்கள். நீங்கள் பெரிய சமூக அமைப்பை, அதில் ஒரு அங்கமாக செயல்படுவதை விரும்புகிறீர்கள். நீங்கள் மிகவும் கனிவானவர் மற்றும் அன்பானவர். உங்களிடம் அனைவரும் எளிதில் பழகலாம், நம் வீட்டு பையன் அல்லது என்ற உணர்வை அனைவருக்கும் கொடுப்பீர்கள். இது உங்களை மிக மிக இணக்கமான நபராக மாற்றுகிறது. இருப்பினும், உங்களிடம் கொஞ்சம் மர்மம் மறைந்திறிக்கும். வெளிப்புறத்தில் வேறு மாதிரியாக தெரிவீர்கள். இருப்பினும் உங்களைப் புரிந்து கொண்டவுடன், நீங்கள் மிகவும் அன்பாகவும் நட்பாகவும் இருப்பீர்கள். நீங்கள் அமைதியாக இருப்பதை விரும்புகிறீர்கள். உங்கள் இருப்பை மற்றவர்கள் உணர வேண்டும் என்பதற்காக முட்டாள்தனமாக நடப்பதை பேசுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் கவர்ச்சிகரமானவர், பேச்சில் அனைவரையும் வசப்படுத்துபவர். நீங்கள் மிகவும் ரொமான்டிக்கான நபராக அறியப்படுவீர்கள். காதலுக்கு, நட்புக்கு மற்றும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். நீங்கள் நேசிப்பதை நேசிக்கப்படுவதை விரும்புகிறீர்கள். வேலையில், தொழிலில், உங்களுக்கு சிறந்த தலைமைத்துவ திறன் வெளிப்படும். உங்களின் தரம் உயர்வாக இருக்கும். எங்கு சென்றாலும் தனித்துவமாக தெரிவீர்கள். வசதியான வாழ்க்கை வாழ விரும்புவீர்கள். வெற்றியாளராக மாற கடுமையாக உழைப்பீர்கள். நீங்கள் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள், அதற்காக உழைக்கவும் தயங்க மாட்டீர்கள்.
T என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் தந்திரசாலி. தேவைப்படும் திறன்களை நீங்களாகவே வளர்த்துக் கொள்வீர்கள். பொதுவாக மோதல் நிறைந்த சூழ்நிலைகளை எதிளில் சரி செய்யும் திறன் கொண்டவர். நீங்கள் மற்றவர்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்வீர்கள். ஆனால், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயக்கமும் கூச்சமும் இருக்கும். அதே போல, மற்றவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்பதில் கூட நீங்கள் தயக்கம் காட்டலாம். நீங்கள் மாற்றங்களை அதிகம் விரும்ப மாட்டீர்கள்.மிகவும் உணர்திறன் மிக்கவர். நிறைய அதிக கற்பனை செய்வீர்கள், பகல் கனவு காண்பீர்கள்.
U என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் எப்போதுமே முழு மனதுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புவீர்கள். எளிதில் வளைந்து கொடுத்து செல்வீர்கள். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள் என்றாலும், ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற யோசனைகள் உங்கள் சிந்தனையை பாதிக்கும். மற்றவர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை விரும்புகிறீர்கள். இருப்பினும், உங்களுக்குத் தேவையானதை விட மற்றவர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு கெட்ட பழக்கம் உங்களிடம் உள்ளது. இது உங்களை பாதிக்கும். எனவே, மற்றவர்களுக்கு கொடுப்பதில் எல்லைகளை வகுத்து, உங்கள் சக்தியை மீறி கொடுப்பதில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், உங்களுக்கென்று தனியுரிமை இருக்கின்றது, அதை நீங்கள் அடைய வேண்டும் என்ற தேவையை வெளிப்படுத்துகின்றன. நினைவாற்றல் அதிகம். கூர்ந்து கவனத்து விஷயங்களை உள்வாங்கிக் கொள்வீர்கள். நீங்கள் பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் மிகவும் சிறந்தவர். ஆனால், இதுவே தேவையில்லாத சிந்தனையை உருவாக்கி உங்களை பாதிக்கக்கூடும். உங்கள் வேலையில் நீங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். நீங்கள் ரிஸ்க் எடுத்து செய்வதை மிகவும் விரும்புகிறீர்கள். காதல் மற்றும் உறவுகளில், உங்கள் துணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவரை முழுதாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள். அதே போல, அவரை நீங்கள் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புவது உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
W என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அமைதி அற்றவர் மற்றும் அலைபாயும் மனம் கொண்டவர் என்பதை உங்கள் ஆளுமை வெளிப்படுத்துகின்றன. காலம், நேரத்தின் அழுத்ததால், நீங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம். நீங்கள் நடைமுறைகளை விரும்புவதில்லை. உங்களுக்கென்று தனி பாதையை அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள். நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரியான வாழ்க்கை முறை என்ற சுழற்சியில் சிக்கிக் கொள்வதால் அதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற மனப்பாங்கு இருக்கும். எனவே, தன்னிச்சையாக செயல்பட, சாகசம் புரிய மற்றும் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் அகங்காரமாகத் தெரியலாம். நீங்கள் வாழ்க்கையில் விரைவாக செட்டில் ஆவதைத் தவிர்க்கிறீர்கள். உங்கள் விதிமுறைகளின்படி வாழ்க்கையை ஆராய்ந்து வாழ விரும்புகிறீர்கள்.
X என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் சுதந்திரமாக வாழ விரும்புவதையும், சுதந்திரத்தை முழுவதுமாக, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுபவிக்க விரும்புவதையும் உங்கள் ஆளுமை வெளிப்படுத்துகின்றன. உங்களுக்கு கட்டுப்பாடுகள் என்றாலே பிடிக்காது. எந்த விஷயத்திலும், யாராலும் அடக்கப்படுவதையோ அல்லது பிணைக்கப்படுவதையோ விரும்ப மாட்டீர்கள். அன்பாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், உங்களை கட்டுப்படுத்துவது கோபம் உண்டாக்கும். உங்கள் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ளவும், உங்களை நீங்களே திருப்திப்படுத்துவதையும் விரும்புகிறீர்கள். உறவுகளில் கூட நீங்கள் அர்ப்பணிப்பாக இருக்க மாட்டீர்கள். ஆனால், உங்களை கவர்ந்திழுக்கும் ஒரு விஷயத்தின் மீது உங்களின் முழு கவனமும் இருக்கும்.
Y என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், உங்கள் ஆளுமை இதுதான் என்று உங்களை பொருத்துவதில் மிகவும் சிரமம் ஏற்படலாம். ஏனென்றால், எப்போதுமே நீங்கள் உங்கள் விருப்பப்படி அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இதற்கு நேர்மாறாக, எதையுமே விரும்பாமல் இருக்கலாம். நீங்கள் பணத்தின் மீது ஆசை கொண்டவராகவும் இருக்கலாம். சில நேரங்களில், விட்டேத்தியாக திரியலாம். உங்கள் சமூக அந்தஸ்து குறையக் கூடாது என்று அதிக அக்கறை கொண்டவர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, வேலையிலும் சரி உங்கள் சுய மதிப்பை நிறைய நிரூபிக்க வேண்டிய சூழலை பல முறை நீங்கள் சந்திப்பீர்கள்.
Z என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் டிப்ளமேட்டிக்கான நபர். ஏனோ தானோவென்று நடந்து கொள்ள மாட்டீர்கள். குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையில் அதை செயல்படுத்த அதிக ஆற்றல் உண்டு. உங்களுடைய மனஉறுதி உங்கள் குறிக்கோளை நிறைவேற்ற உதவியாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை நீங்கள் அதிகாரம் மற்றும் தலைமைப் பண்பு வகிப்பதை விரும்புவீர்கள். நீங்கள் மிகவும் ரொமான்டிக்கானவர், மற்றவர்களை மகிச்சியாக்குவதில் உங்களுக்கு திருப்தி மன கிடைக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |
பெயரின் முதல் எழுத்தை கொண்டு உங்கள் ஆளுமையை சோதிக்கலாமா….