Fitkari in Tamil
நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு என்று பார்த்தால் ஒரு நாளைக்கு மட்டும் நிறைய வகையான பொருட்களை பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் பொருளுக்கான பெயர் என்பது தெரியும். அதுவே அதனை பற்றிய வேறு ஏதேனும் தகவல்கள் தெரியுமா என்று கேட்டால் அது கொஞ்சம் கடினம் தான். ஏனென்றால் ஒவ்வொரு பொருளும் ஒரு ஒரு மாதிரியான தகவலைகளை கொண்டிருக்கும். அதேபோல் அத்தகைய தகவல்களை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் இதற்கு என்று தனியாக தேட வேண்டும் என்று நினைத்து அப்படியே விட்டு விடுவார்கள். அந்த வகையில் இன்று படிகாரம் பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
படிகாரம் பற்றிய தகவல்:
பொதுவாக அலுமினியத்தின் நீரேற்றிய இரட்டை சல்பேட்டு உப்பே படிகாரம் எனப்படும். இத்தகைய படிகாரத்திற்கான பொதுவான வாய்ப்பாடு என்பது (KAl(SO4)2·12H2O) எனப்படும்.
இதில் நேர்மின் அயனியினை குறிக்கும் வகையில் X என்பது அமைந்துள்ளது. இத்தகைய X-ஐ பொட்டாசியம் அல்லது அலுமினியம் என்று கூறுவார்கள்.
அதுமட்டும் இல்லாமல் பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டு (KAl(SO4)2·12H2O) என்ற வேதிச் சேர்மத்தையும், இதனை சார்ந்து உள்ள வேதிபொருட்களையும் குறிப்பிடும் வகையில் தான் படிகாரம் ஆனது காணப்படுகிறது.
இதில் அலுமினியத்தை குரோமியம் போன்ற 3 இணைத்திறன் அயனிகள் இடப்பெயர்ச்சி செய்து உருவாகும் உப்பினை ஆலம் அல்லது பரிகாரம் என்ற தான் அழைக்கப்படுகிறது.
பொட்டாசியம், சோடியம் மற்றும் அமோனியம் படிகாரங்கள் என்ற மூன்று முக்கியமான படிகாரங்கள் பெரும்பாலும் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது.
படிகாரம் வாய்ப்பாடு:
- அமோனியம் படிகாரம்- NH4Al(SO4)2·12H2O
- பொட்டாசியம் படிகாரம்- KAl(SO4)2·12H2O
- சோடியம் படிகாரம்- NaAl(SO4)2·12H2O
சோயா பீன்ஸ் பற்றி பலரும் அறியாத தகவல்
படிகாரம் பயன்கள்:
- பொதுவாக சிலருக்கு எவ்வளவு தான் சுத்தமாக குளித்தாலும் கூட வியர்வை துறுநாற்றம் என்பது வீசிக்கொண்டே தான் இருக்கும். இவ்வாறு இருந்தால் முதலில் வழக்கமாக குளிப்பது போல் குளித்து விட்டு பின்பு கடிகாரத்தை உடலில் தேய்த்து குளித்தால் போதும் வியர்வை துறுநாற்றம் நீங்கி விடும்.
- படிகாரத்தை பொடியாக தயார் செய்து பின்பு அந்த பொடியுடன் ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் உங்களுடைய முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், முகச்சுருக்கும் அனைத்தும் மறைந்து விடும்.
- ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் குதிங்காலில் வெடிப்புகள் காணப்படும். இவ்வாறு வெடிப்புகள் இருந்தால் அதனை சரி செய்ய படிகாரத்தை காலில் தேய்த்தால் போதும்.
- கையில் நகசுத்திகள் இருந்தால் அதனை சரி செய்ய படிகாரத்துடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல செய்து அப்ளை செய்வதன் மூலம் நகசுத்திகள் சரியாகி விடும்.
ரோஸ்மேரி பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |