அழிந்துவரும் நாட்டுப்புற கலைகள் ஒரு பார்வை…

Advertisement

Folk art of Tamilnadu

கலையும் கலாச்சாரமும் ஒரு சமூகத்தின் அடையாளம். அவை நமக்கு முன்னோர்களின் பாரம்பரியத்தை சொல்லும் ஒரு கருவியாக உள்ளது. அத்தகைய கலைகளை பாதுகாப்பது நமது கடமைகளில் ஒன்றாகும். நாட்டுப்புற கலைகள், சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் ஒரு கருவியாக பார்க்கப்பட்டது. நாட்டுப்புற கலைகள், ஆடல், பாடல் என பொழுது போக்கிற்கு மட்டும் இல்லாமல்  . முற்காலத்தில் இவை ஒரு செய்தியை பரப்பும் ஊடகமாகவும் திகழ்ந்தது. பெரும்பாலும் பொம்மலாட்டம், வில்லுப் பாடல்கள், குறவன் குறத்தி ஆட்டம் மற்றும் கரகாட்டம் மூலம் மக்களுக்கு கருத்துக்கள் பகிரப்பட்டது. இத்தகைய கலைகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது.

என்னதான் நாம் காலங்களை கடந்து தொழில்நுட்ப வளர்ச்சிகளை பெற்றிருந்தாலும், புதிய கலைகள் உருவாகி இருந்தாலும் அதற்கு அடித்தளமாக இருப்பவை நாட்டுப்புற கலைள் தான். இவை நம் சமூகத்தின் வேர் என்ன என்பதை பலரும் மறந்து நாட்கள் பல ஆகிவிட்டது. அத்தகைய கலைகளை நமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல நம்மால் முடிந்த சிறு முயற்சிகளை எடுப்போம். அந்த வகையில் இன்று சில நாட்டுப்புற கலைகளை பற்றியும் அது உருவாக்க கதை பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்…

கரகாட்டம்:

கரகாட்டம் என்பது கரகம் + ஆட்டம் ஆகும். கரகம் என்பது நீர் நிறைந்த பானை என்றும், ஆட்டம் என்பது நடனத்தையும் குறிக்கும் சொற்கள் ஆகும்.

கரகாட்டம் தமிழ்நாட்டின் ஒரு பழமையான நாட்டுப்புற கலையாகும்.

கரகாட்டம் என்பது அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடும் ஆட்டம் ஆகும்.

கரகம் என்றும் சொல் தொல்காப்பியத்தில் “நூலே கரகம் முக்கோல் மனையே” என்று இடம்பெற்றுள்ளது. இவை இதன் பழமையை எடுத்துரைக்கிறது.

கரகம் இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்று சக்தி கரகம். கோவில் திருவிழாக்களில், அலங்கரித்த கரகத்தை தலையில் சுமந்து வருவது சக்தி கரகம் என்றும். பொது நிகழ்ச்சிகளில் அலங்கரிக்கப்பட்ட சொம்பை தலையில் வைத்து ஆடுவது ஆட்டக் கரகம் என்றும் அழைக்கப்படும்.

கரகாட்டம்

கரகத்தின் வடிவம்:

சொம்பின் வாய் பகுதியில் தேங்காயை வைத்து, அதன் மேல் குடை போன்ற அலங்காரம் செய்து அதில் ஒரு கிளி பொம்மை இருக்கும்.

ஒயிலாட்டம்:

ஒயிலாட்டம்

ஒயிலாட்டம் என்பதற்கு கருணையின் நடனம் என்பது பொருள் ஆகும். ஒயில் என்ற சொல்லுக்கு அழகு, எடுப்பு, கம்பீரம், அலங்காரம் என்றும் பல பொருள் உண்டு. ஒயிலாட்டம் தமிழ்நாட்டின் மதுரை மண்டலத்தில் தோன்றிய ஒரு நாட்டுப்புற கலைகளில் ஒன்று.

ஒயிலாட்டம் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் முக்கிய நீரோட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும்.முக்கியமாக ஒயிலாட்டம் கிராம திருவிழா காலங்களில் அறுவடைக்குப் பிறகு பறவைகளிடமிருந்து தானியங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் நடனமாக இது பார்க்கப்படுகிறது.

ஆண்கள் ஆடும் ஆட்டமாக ஒயிலாட்டம் இருந்ததால் கம்பீரமான ஒரு கலையாக பார்க்கப்பட்டது.

ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம் இது. ஒயிலாட்டத்தில் கலந்து கொள்ளும் ஆட்டக்காரர்களுக்கு வயது வரையறை இல்லை. ஒயிலாட்டத்திற்கென்று தனித்த ஒப்பனை முறைகள் உண்டு.

கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு, வலது கையில் ஒரே வண்ணத்திலான கைக்குட்டை பிடித்து, தலையில் ஒரே வண்ணத்தில் துணிகளைக் கட்டியிருப்பது இவர்களின் நேர்த்தியை காட்டும்.

ஆட்டத்தின் வேகத்தைத் தீர்மானிக்க ஆட்ட இலக்கணங்களும் உண்டு. ஆட்டத்தின் வேகத்தைப் பொறுத்தும் அடவுகளின் வேகத்தைப் பொறுத்தும் இவற்றை வகைப்படுத்துவர்.

மெதுவான ஆட்டத்திற்கு தக்கு என்றும் வேகமான அடவுகளுக்கு காலம் என்று பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement