உங்கள் கால் விரலின் வடிவமைப்பை வைத்து, நீங்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்…

feet personality test in tamil

கால் விரல் அமைப்பு

நம் முன்னோர்கள் நம் உடல் உறுப்புகளின் அமைப்பை பொறுத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்று கூறுவார்கள்.. அதாவது, மூக்கு இப்படி இருந்தால் அதற்கு ஒரு குண அதிசயம் என்றும், முகம் இப்படி இருந்தால் அதற்கு ஒரு குண அதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள். எனவே அந்த வகையில் இப்பதிவில் நம் கால் விரல்களின் அமைப்பை வைத்து நம் குண அதிசயங்களை எப்படி வகுத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Foot Personality Test in Tamil:

பொதுவாக மனிதர்களுக்கு நான்கு விதமான கால் விரல்களின் அமைப்பு இருக்கும். எனவே ஒவொரு அமைப்பிற்கும் என்னென்ன குண அதிசயங்கள் இருக்கிறது என்பதை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்க்கலாம்.

கட்டை விரலும் அதற்கு அருகில் உள்ள இரண்டு விரல்களும் சமமாக இருப்பவர்கள்:

personality test foot shape in tamil

கட்டை விரலும் அதற்கு அருகில் உள்ள இரண்டு விரல்களும் சமமாக இருப்பரவர்கள், பல்வேறு கலாச்சாரத்தை விரும்புபவர்களாகவும் அதனை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும், இவர்கள் பயணத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். அதாவது, பல்வேறு நாடுகளை சுற்றி பார்க்க ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல், மனவலிமை உடையவர்களாவும் இருப்பார்கள்.

சுண்டு விரலில் இருந்து ஏறுவரிசை போன்ற அமைப்புடையவர்கள்:

சுண்டு விரலில் இருந்து ஏறுவரிசை போன்ற அமைப்புடையவர்கள்

இந்த வகையான அமைப்புடையவர்கள், அனைவரிடமும் எளிமையாக பழக கூடியவர்கள். அனைவரிடமும் சமமாக பழகுவார்கள் ஏற்ற தாழ்வுடன் பழக மாட்டார்கள். மேலும், இயற்கையை ரசிப்பவர்களாகவும் மற்றும் எந்தவொரு செயலையும் நுணுக்கமாகவும் அதிக ஆர்வத்துடனும் செய்வார்கள்.

சிங்கப்பல் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும்

கட்டைவிரல் சிறியதாகவும் அதற்கு அருகில் உள்ள விரல் பெரியதாகவும் அதற்கும்  அருகில் உள்ள விரல் சிறியதாகவும் கடைசியாக உள்ள இரண்டு விரல்களும் சமமாக இருப்பவர்கள்:

kaal viral amaipu

இந்த வகையான விரல் அமைப்பில் உள்ளவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழக்கூடியவர்கள்.. சம்பாதிக்கணும் அதனை செலவு செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் நினைப்பவர்கள். மேலும், இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்கள் மட்டுமின்றி இவர்கள் கூட இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வார்கள்.

கட்டை விரல் சிறியதாகவும் அதற்கு அருகில் உள்ள விரல் பெரியதாகவும் அதற்கு அடுத்த உள்ள விரல்கள் இறங்கு வரிசையிலும் இருப்பவர்கள்:

feet personality test in tamil

இந்த வகையான விரல் அமைப்பை கொண்டவர்கள், எப்போதும் துறுதுறுவென்று இருப்பார்கள். நன்கு வேலை செய்வார்கள் ஆனால் உடனே சோர்வாகி விடுவார்கள். மேலும், ஒரு கூட்டத்தில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால், மற்றவர்கள் அனைவரும் இவரை கவனிக்க வேண்டும் என்பதற்காக சுவாரஸ்யமான விஷயங்களை செய்வார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களிடம் பேச்சாற்றல் திறமை அதிகமாகவே இருக்கும்.

ஐந்து விரல்களும் சமமாக இருக்கும் அல்லது கட்டை விறல் பெரிதாகவும் மற்ற நான்கு விரல்களும் சமமாக இருக்கும்:

இந்த வகையான விறல் அமைப்பை உடையவர்கள், எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையையும் எளிதாக கையாளும் திறமை உடையவர்கள். மேலும், எதிலும் பொறுமையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள்.

நீங்கள் பேனா பிடிக்கும் விதத்தை வைத்து உங்களின் குணங்களை சொல்கிறேன்..

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil