மறதிக்கு காரணம் என்ன ?
மனிதனிடம் இருக்கும் பிரச்சனைகளில் மிகவும் ஆபத்தானது மறதி. மறதி பல சமயங்களில் பிரச்சனைகள் சில சமயங்களில் நம்மை தான். மறதி இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. மறதியில் பல வகைகள் உள்ளது. சில வகையான மறதியால் நமக்கு பெரிய பாதிப்புகள் இருப்பது இல்லை. ஆனால் அந்த மறதி அதிகரிக்கும் போது கண்டிப்பாக சில
பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அந்தவகையில் இன்று நமது பேச்சின் நடுவே ஏற்படும் தடங்கலுக்கு காரணம் மறதி என்றால், கண்டிப்பாக நமக்கு பயம் ஏற்படுவது இயல்புதானே. அப்படி நமது பேச்சின் நடுவே நாம் அடிப்படை விஷயங்களை மறப்பது என்ன ? எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறதுஎன்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மறதி பிரச்சனையா! காரணம் என்ன ?
நாம் பேசிக்கொண்டிருக்கும் போது நடுவே நாம் பேச வந்த வார்த்தைகள் மறந்து தடுமாறுவது நம்மில் பெரும்பாலானவர் எதிர்கொள்ளும் பிரச்சனை. இப்படி வார்த்தைகள் இன்றி தடுமாறும் போது நமக்குள் ஒரு பயன் உருவாகும். ஒரு முறை என்றால் பிரச்சனை இல்லை, இப்படி தொடர்ந்து ஏற்படும் போது நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் உருவாக்க வாய்ப்புள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள், பெயர்கள் மற்றும் எண்களை கூட நமது பேச்சுக்கு நடுவே மறக்கும் நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக நாம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கின்றோம் என்று அர்த்தம்.
டிமென்ஷியா என்றால் என்ன ?
இந்த மறதியால் நமக்கு ஏற்படும் நரம்பியல் பாதிப்புக்கு டிமென்ஷியா என்பது மருத்துவத்தில் கூறப்படும் வார்த்தையாகும்.
டிமென்ஷியா என்பது நினைவாற்றல் இழப்பு ஆகும். அதாவது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் அடிப்படை விஷயங்களை மறைப்பதை குறிக்கிறது.
இந்த பிரச்சனை பொதுவாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காணப்படுகிறது. ஆனால் டிமென்ஷியா என்பது முதியவர்களை அதிகம் பாதிக்கும்.
பெரியவர்களின் வயதுமுதிர்வின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வு எந்த வகையான இடங்களில் சூழ்நிலைகளில் நாம் வார்த்தைகளை மறக்கின்றோம் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
இந்த பிரச்சனை அதிகம் பயன்படுத்தாத வார்த்தைகள் இடங்கள் மற்றும் ஒரு புதிய சூழ்நிலையில் ஏற்படும். அதாவது மருத்துவமனை ரயில்நிலையங்கள் போன்றவற்றில் பெரியவர்கள் இந்த மாதிரியான மறதியால் ஏற்படும். இளம்தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு முகாம், தேர்வறை போன்ற பதட்டப்படும் இடங்களில் ஏற்படுகிறது.
சமூகத்திற்கும் நமக்குமான இடைவெளியை உணரும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பாதிப்பின் உச்ச நிலை:
ஒருவருக்கு டிமென்ஷியா பிரச்சனை இருந்து தீவிரம் அடைந்திருந்தால், அவர் தான் பல ஆண்டுகளாக பயன்படுத்திய பொருளின் பெயர் மற்றும் அதனை பயன்படுத்தும் விதம் அதன் தன்மையை மறந்திருப்பார்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் தான் முன் இருக்கும் குடைக்கு பெயர் தெரியாமல் இருப்பதும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்ற தகவல்களும் மறந்திருக்கும்.
தீர்வு:
இந்த பிரச்சனைக்கு நரம்பியல் வல்லுநர்களை ஆலோசிப்பது சிறந்தது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |