Free Helmet Rules in Tamil
பொதுவாக பைக் மேல் உள்ள ஆர்வம் அனைவருக்கும் குறையாது, ஒவ்வொருவரின் டேஸ்ட் படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான bike-குகள் பிடிக்கும். சில பேர் பைக் வாங்குவதற்காகவே வேலைக்கு செல்வார்கள். தமக்கு பிடித்தமான பைக்கை தமது உழைப்பால் வாங்குவது அவர்களுக்கு அதீத திருப்தியை தரும். அப்படி வாங்கும் பைக்கிற்கும் நிறைய விதமான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளது. இது வாங்குபவர்களுக்கு மற்றும் விற்பவர்களுக்கும் பொருந்தும்.
அதில் ஒரு முக்கிய விதிகளான 2 இலவச Helmet எப்படி வாங்குவது என்பதை பற்றி தான் இந்த பதிவுல பாக்கபோறோம்.
Central Motor Vehicles Rule (CMVR), 1989 (Section 138)
மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989, விதி 138 (4) (எஃப்) இரு சக்கர வாகனம் வாங்கும் போது எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக இந்திய தர நிர்ணய பணியகத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் புதிய பாதுகாப்பு தலைக்கவசங்களை கொடுக்குமாறு போக்குவரத்து ஆணையர் சி சமயமூர்த்தி கூறியுள்ளார்.
மாநிலத்தில் புதிய பைக்குகளை வாங்குபவர்கள் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்களிடம் இருந்து இரண்டு ஹெல்மெட்களை இலவசமாகப் பெற வேண்டும். இறப்பு எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் போக்குவரத்து நிறுவனம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதனால் இறப்புகள் குறையும் என்று நம்புகிறார்கள்.
Hotel-ல தேவையில்லாம GST-கும் சேர்த்து காச கட்டாதீங்க
Helmet Rules in Tamil
ஹெல்மெட் விதியின் அமலாக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் ஹெல்மெட்கள் Bureau of Indian Standards (BIS) தேவைகளை கடைபிடிக்க வேண்டும்.
இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் வாங்கும் போது BIS தரநிலைகளுக்கு இணங்க இரண்டு ஹெல்மெட்களை வழங்க வேண்டும்-ஓட்டுநருக்கு ஒன்று மற்றும் பயணிகளுக்கு ஒன்று- வாங்கும் போது.
அதுமட்டுமின்றி அந்த ஷோரூமில் numberplate, கைப்பிடி முதலியன அவர்கள் இலவசமாக கொடுக்கவேண்டும்.
Bike வாங்குறப்ப Free-யா 2 Helmet தரலேனா?
அனைத்திற்கும் பதில்களை வைத்துள்ளேன். RTO-வின் ரூல்ஸ் படி பைக் வாங்குபவர்களுக்கு இலவசமாக இரண்டு ஹெல்மெட்களை அவர்கள் கொடுத்தே ஆகவேண்டும். இல்லையெனில் நம்ம RTO ஆபீஸ்ல இத பத்தி புகார் கொடுக்கலாம்.
அப்படி நம்ம குடுத்தோம்னா அவர்களோட trade certificate வரைக்கும் cancel செய்றதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அதனால இனிமே வண்டி வாங்குறப்ப உஷார் மக்களே!!!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |