Gallbladder பற்றி உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

Gallbladder in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Gallbladder என்றால் என்ன.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக, ஆங்கிலத்தில் நமக்கு தெரியாத பல வார்த்தைகள் இருக்கும். அந்த வார்த்தைகளை நாம் புதிதாக கேள்விப்படும்போது, அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. அந்த வகையில் நீங்கள் Gallbladder என்பதன் தமிழ் அர்த்தமும், அதனை பற்றிய விவரங்களையும் தெரிந்துக்கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Gallbladder என்பதை நாம் அதிக இடங்களில் கூற கேட்டிருப்போம், அல்லது படித்து இருப்போம். சொல்லப்போனால், இந்த வார்த்தையை நாம் மருத்துவமனையில் அதிகமாக கூற கேட்டிருப்போம். ஆனால், அப்படி என்றால் என்ன.? என்று நாம் ஒரு நிமிடம் யோசித்து இருப்போம்.

Gallbladder என்றால் என்ன.?

Gallbladder என்றால் என்ன

Gallbladder என்பது பித்தப்பை ஆகும். இது, நம் உடலில் கல்லீரலுக்கு கீழ் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பை போன்ற அமைப்பாகும். இந்த Gallbladder ஆனது, கல்லீரலில் இருந்து பித்தண்ணீரை எடுத்து செல்லும் பித்த நாளத்துடன் இணைந்து இருக்கும்.

பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் உண்டாவதற்கான காரணங்கள்

Gallbladder வடிவமைப்பு:

பித்தப்பை (Gallbladder) கல்லீரலின் வலதுபக்கத்தின் கீழ் பகுதியில் காணப்படும் உறுப்பு ஆகும். இது நீல நிறத்தில் காணப்படும். இது கிட்டதட்ட 7 முதல் 10 சென்டிமீட்டர்கள் வரை நீளத்திலும் 4 சென்டிமீட்டர்கள் விட்டத்திலும் இருக்கும். இதன் கொள்ளளவு 50 மில்லி லிட்டர்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல், இந்த பித்தப்பை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

Gallbladder

பித்தப்பையின் வேலை:

பித்தப்பையின் முதன்மையான வேலை பித்தத்தைச் சேமித்தல் ஆகும். இது உணவிலுள்ள கொழுப்புக்களின் சமிபாட்டுக்கு தேவையானது. ஈரலால் சுரக்கப்பட்டு கல்லீரல் நாளத்தின் ஊடாக அனுப்பப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படும். பித்தப்பையில் குறித்த நேரத்தில் 30 முதல் 60 மில்லி லிட்டர்கள் (1.0 முதல் 2.0 US fl oz) பித்தம் சேமிக்கப்படுகிறது.

பித்தப்பை கல்:

நாம் அனைவருமே பித்தப்பை கல் என்பதை அறிந்து இருப்போம். பித்தப்பை கல் உருவாவதற்கு முக்கிய காரணம் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வதே காரணம் என்று கூறப்படுகிறது.

பித்தப்பை கல் அறிகுறி

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement