விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி என்பது தமிழக முழுவது கொண்டாடக்கூடிய ஒரு விழாவாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொருடைய வீட்டிலும் விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் என படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு தெரு மற்றும் ஊர்களில் விநாயகர் சிலை வாங்கப்பட்டு அதக்ரு பூஜை செய்து பின்பு 3 அல்லது 5-வது நாட்களில் நீரில் கரைக்கப்படுகிறது. இவ்வாறு நாம் கரைக்கும் விநாயகர் சிலைகள் அனைத்தும் நீரில் கரைவது இல்லை. இதன் படி பார்த்தால் நிறைய சிலைகள் கரையாமலே இருக்கிறது. ஆகவே இன்று நீரில் கரையாமல் இருக்கும் விநாயகர் சதுர்த்தி சிலையினால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் வருகிறது என்றும், யாருக்கு அது ஆபத்தினை உண்டாக்குகிறது என்றும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சுற்றுச்சூழலை எப்படி பாதிக்கிறது:
- விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் பல விதமான வண்ணங்கள் அதன் மீது பூசப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.
- இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளோடு, பூக்கள், தேங்காய் மற்றும் இதர பொருட்களையும் நீரில் சேர்த்து கரைக்கப்படுகிறது. எனவே இத்தகைய முறையில் கரைப்பதன் மூலம் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் எனப்படும் செயற்கைக் களிமண்ணால் செய்த சிலைகள் நீரில் கரைந்ததும் ஜிப்சமாக மாறிவிடுகிறது.
- ஒருவேளை பாஸ்பேட்டின் அளவு அதிகமாக இருக்கும் நீர்களில் இத்தகைய சிலைகளை கரைப்பதன் மூலம் அதனுடைய அமிலத்தன்மை அதிகரிக்க செய்கிறது. இத்தகைய காரணத்தினால் மனிதர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
- அதேபோல் விநாயகர் சிலைக்கு பயன்படுத்தும் வண்ணங்களிலும் பாதரசம், குரோமியம், நிக்கல் மற்றும் காரீயம் போன்ற பொருட்கள் கலந்து இருப்பதனால் இவை நீருடன் கலப்பதனால் மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
நீர் பாதிப்பு:
- இந்த காலத்தில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலை ஆனது களிமண்ணால் தயாரிக்கப்படுவது என்பது மிகவும் குறைவு.
- இவ்வாறு களி மண்ணால் தயாரிக்கப்படாத விநாயகர் சிலையினை நாம் நீரில் கரைத்தாலும் அவை எளிதில் கரைவது இல்லை. அது கரைவதற்கு சில மாதம் வரும் வருடங்கள் கூட ஆகலாம். இதனால் நீரில் ஆக்ஸிஜனின் அளவு என்பது குறையத்தொடங்கும்.
- மேலும் நீண்ட நாட்கள் கரையாமல் இருப்பதனால் நீரின் ஆழம் என்பது படிப்படியாக குறையும் வாய்ப்பும் உள்ளது.
எனவே இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்றாலும், நமது ஆரோக்கியம் சிறப்பாகமாக இருக்க வேண்டும் என்றாலும் களி மண்ணால் செய்த விநாகயர் சிலையினை வாங்கி வழிபாடு செய்வது என்பது நல்லது.
பின்பு இந்த சிறிய சிலைகளை கரைப்பதன் மூலம் அவை எளிதில் நீரில் கரைந்து விடும். நீர் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பும் இருக்காது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |