வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காலி சிலிண்டரை மாற்றும்பொழுது இப்படி செய்யாதீங்க!

Updated On: May 26, 2023 10:17 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Gas Cylinder Awareness in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! நமது அன்றாடம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பது கேஸ் சிலிண்டர் ஒன்றாகும். கேஸ் அடுப்பில் சாம்பார் முதல் சுடுநீர் வரை அனைத்தையும் தயார் செய்வதற்கு நாம் கேஸ் சிலிண்டரை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம். இவ்வாறு பயனுள்ளதாக உள்ள கேஸ் சிலிண்டரை நாம் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது நமக்கே அது ஆபத்தாக மாறிவிடும். சரி இன்றைய பதிவில் நாம் கேஸ் சிலிண்டரை எப்படி பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

காலி சிலிண்டரை மாற்றும்பொழுது இப்படி நடந்தா ஆளே காலி!!Gas Cylinder

ஒரு சிலிண்டருக்கு பக்கத்தில் இன்னொரு சிலிண்டரை வைத்து பயன்படுத்த கூடாது.

சமயலறையில் இருக்கும் கேஸ் சிலிண்டருக்கு பக்கத்தில் மின்சாரம் பொருட்களை வைத்து பயன்படுத்த கூடாது ஏனென்றால், மின்சாரம் பொருட்களில் ஏற்படும் மின்னழுத்த ஏற்ற தாழ்வினால் கேஸ் சிலிண்டரில் கசிவு உண்டாகி ஆபத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது என்று கூறபடுகிறது.

தற்பொழுது உள்ள மாடர்ன் கிச்சன் என்ற பெயரில் மரத்தாலான கபோர்டில் சிலிண்டரை வைத்து மூடிவிடுகின்றன, இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். ஏனென்றால் சிலிண்டரை அடைத்து வைக்கும் போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டாலும் அது வெளியேற வழி இல்லாமல் ஆபத்தில் முடிந்துவிடும் ஆக சிலிண்டரை காற்றோட்டமாக வைத்து பயன்படுத்த வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய இத்தனை வழி இருக்கா!! இது தெரியாம போச்சே..!

மேலும் சிலிண்டரை பொருத்தும் முன்பு அதில் இருக்கும் மூடியை திறந்து கேஸ் கசிக்கிறதா என்று ஒரு முறை சோதித்து பார்த்துக்கொள்ளவும். அதனை எப்படி சோதிக்க வேண்டும் என்றால் சோப்பு நீர் கலந்த நீரை அதன் வாய்புரம் ஊற்றவும் அவற்றில் வாய்வு கசிந்தால் ஒரு விதமாக குமிழ் உருவாகும், ஆக குமிழ் உருவானால் அதிக கசிவு ஏற்படுவதை நாம் உறுதி செய்துகொள்ள முடியும். இவ்வாறு கசிவு இருந்தால் உடனடியாக அந்த கேஸ் சிலிண்டரை மூடிவிடவும்.

கேஸ் அடுப்பு எரியும் போது அதிகமான காற்றோட்டம் இருந்தால் நெருப்பு அணைத்து அதன் மூலம் கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவே அடுப்பு முறையான முறையில் எரிகிறதான் என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

காலை எழுந்தவுடன் அடுப்பை பற்ற வைக்க கூடாது கிச்சனில் உள்ள கதவுளை திருந்து உள் வெளிச்சம் வந்த பிறகு அடுப்பை ஆன் செய்வது மிகவும் நல்லது.

அதேபோல் கேஸ் சிலிண்டரை மாட்டும் போது மிக கவனமாக மாட்ட வேண்டும். அலட்சியமாக இருக்க கூடாது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now