Gingelly Oil in Tamil
பொதுவாக நாம் அனைவருமே நமது உணவுகளில் நல்லெண்ணெய் பயன்படுத்துகிறோம். ஆனால் அதனை பற்றிய முழுவிவரகங்களையும் பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். அப்படி உங்களுக்கும் நல்லெண்ணெய் பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்றால் பரவயில்லை இன்றைய பதிவில் நாம் நல்லெண்ணெய் எவ்வாறு தயாரிக்கபடுகிறது.
அதன் பிறப்பிடம், வரலாறு மற்றும் அதில் உள்ள அமில வகைகள் போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து நல்லெண்ணெய் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்=> Jojoba oil பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
Gingelly Oil பிறப்பிடம் மற்றும் வேறுபெயர்கள்:
Gingelly Oil என்பதின் மற்றொரு பெயர்கள் முறையே Sesame Oil, எள் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் எள் விதைகளில் இருந்தே பிரித்தெடுக்கபடுகிறது.
இந்த எள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியைத் தாங்கும் பயிராக பயிரிடப்பட்டது, இது மற்ற பயிர்களை பயிரிடமுடியாமல் கைவிடப்பட்ட இடத்தில் வளரக்கூடிய தன்மையை கொண்டது.
மேலும் முதல் முதலாக எண்ணெய்காக பதப்படுத்தப்பட்ட பயிர்களில் இந்த எள் விதைகளும் ஒன்றாகும்.
இந்த எண்ணெயின் பிறப்பிடம் என்று தனியாக ஒரு இடம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த Gingelly Oil பொதுவாக ஆசிய நாடுகளில் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக இந்த நல்லெண்ணெய் தென் இந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள் மற்றும் சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெயை உபயோகிக்கின்றனர்.
நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைப் பெற்றுள்ளது.
Gingelly Oil ஊட்டச்சத்துக்கள்:
Gingelly Oil பின்வரும் கொழுப்பு அமிலங்களால் உருவானது : லினோலிக் அமிலம் (மொத்தத்தில் 41%), ஒலிக் அமிலம் (39%), பால்மிடிக் அமிலம் (8%), ஸ்டெரிக் அமிலம் (5%) மற்றும் பிற சிறிய அளவில்.
மேலும் இந்த Gingelly Oil-ல் அதிக அளவில் வைட்டமின் K உள்ளது.
Gingelly Oil Benefits in Tamil:
- பொதுவாக நல்லெண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
- தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு இந்த நல்லெண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- இதயம் நலத்துடன் இருக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
- உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருப்பதற்கும் நல்லெண்ணெய் பயன்படுகிறது.
- புற்றுநோயை தடுக்க நல்லெண்ணெய் உதவுகிறது.
- ஆர்த்ரைடிஸ் நோய் முற்றிலும் குணமாக நல்லெண்ணெய் உதவுகிறது.
- பற்கள் வலுப்பெற நல்லெண்ணெய் பயன்படுகின்றது.
இதையும் படியுங்கள்=> நல்லெண்ணெய் பயன்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |