ஒட்டகச்சிவிங்கி பற்றிய தகவல்கள் | Facts About Giraffe in Tamil

Advertisement

ஒட்டகச்சிவிங்கி பற்றிய தகவல்கள் தமிழ் | Ottagachivingi Patri in Tamil

Giraffe Information in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஒட்டகச்சிவிங்கி பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த உலகத்தில் பல விதமான விலங்குகள், பூச்சிகள், பறவைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு உயிரினங்களும் அமைப்பிலும், உருவத்திலும், செயலிலும் வேறுபட்டு காணப்படுகிறது. நாம் இந்த தொகுப்பில் உலகின் மிக உயரமான விலங்கான ஒட்டகச்சிவிங்கி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Giraffe Information in Tamil:

ஒட்டகச்சிவிங்கி பற்றிய தகவல்கள்

 • வகுப்பு: பாலூட்டி
 • தொகுதி: முதுகுநாணி
 • திணை: விலங்கினம்
 • வரிசை: Artiodactyla
 • ஆங்கில பெயர்: Giraffe
 • ஒட்டகச்சிவிங்கி ஆப்பிரிக்காவில் வாழும் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய அசைபோடும் பாலூட்டி ஆகும். ஆண் ஒட்டகச்சிவிங்கியை விட பெண் ஒட்டகச்சிவிங்கிகள் உயரத்திலும், எடையிலும் குறைந்து காணப்படுகிறது. ஆண் ஒட்டகச்சிவிங்கியின் உயரம் 16 முதல் 18 அடியாகும். இதனுடைய எடை 900 கிலோ கிராம் ஆகும்.

வகைகள்:

 1. வடக்கு ஒட்டகச்சிவிங்கி
 2. தெற்கு ஒட்டகச்சிவிங்கி
 3. மாசாய் ஒட்டகச்சிவிங்கி
 4. ரெட்டிகுலேட்டட் ஒட்டகச்சிவிங்கி என நான்கு வகைகளை கொண்டுள்ளது.

ஒட்டகச்சிவிங்கி பற்றிய தகவல்:

 • Giraffe Information in Tamil: ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன. இதனுடைய வால் 1 மீட்டர் நீளம் இருக்கும். ஒட்டகச்சிவிங்கி குனியும் போது மூளையில் இருக்கும் நாளங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன.
 • ஒட்டகச்சிவிங்கியின் உடல் முழுவதும் பிரவுன் கலர் புள்ளிகள் காணப்படுகின்றன. ஆனால் அடிப்பகுதியில் எந்த ஒரு புள்ளியும் இல்லாமல் வெள்ளை நிறத்துடன் காணப்படுகின்றன.
 • இதனுடைய நாக்கு 45 செண்டிமீட்டர் இருக்கும், நாக்கின் நிறம் நீல நிறத்தில் இருக்கும். முன்னங்கால்கள் பின்னங்கால்களை விட 10% நீளமானவை. இதயத்தின் எடை 10 கிலோ கிராம்.

பார்வை திறன்:

 • Facts About Giraffe in Tamil: இதற்கு நீண்ட கழுத்து இருப்பதால் உயரமான மரங்களில் உள்ள இலைகளை உண்பதற்கு உதவியாக இருக்கிறது. இதனுடைய கண் பார்வை மிகவும் கூர்மையாகவும், தெளிவாகவும் உள்ளது. வேட்டையாட வரும் விலங்குகளை தூரத்தில் இருந்தே கணிக்கும் திறன் கொண்டது.

உணவு:

 • Giraffe Information in Tamil: ஒட்டகச்சிவிங்கிகளுக்கு தேவையான தண்ணீரை உணவில் இருந்து எடுத்து கொள்கிறது. வறண்ட காலங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தேவைப்படுகிறது. இவை இலை, தழைகளை உண்டு வாழ்கிறது. தலையை கீழே கொண்டு வருவதற்கு இவை முன்கால்களை தளர்த்த வேண்டும்.

இனப்பெருக்கம்:

 • Facts About Giraffe in Tamil: 14 முதல் 15 மாதத்திற்கு பின் குட்டிகளை ஈனுகிறது. நின்றபடியே குட்டிகளை ஈனும் தன்மையை கொண்டுள்ளது. குட்டிகள் 1.8 மீட்டர் உயரம் இருக்கும். இவை சிங்கம், கழுதைப்புலிகள், சிறுத்தை, ஓநாய்கள் போன்றவற்றால் வேட்டையாடப்படுகின்றன.
 • 20% முதல் 50% வரை ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டையாடுதலில் இருந்து தப்பித்து உயிர் வாழ்கின்றன. விலங்குகள் வேட்டையாடப்படாமல் இருந்தால் 26 ஆண்டுகள் வரை வாழும் திறனை உடையது.
விலங்குகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement