Gongura in Tamil
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்..! நமது பொதுநலம்.கம பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு பயனடைந்து வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அதாவது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதிலும் குறிப்பாக நாம் மிக மிக விரும்பி அல்லது விருப்பமே இல்லாமல் உண்ணும் உணவுகளை பற்றிய நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொருளை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு. அதாவது ஒரு பொருளின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், பயன்கள் போன்றவற்றை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் புளிச்ச கீரையின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Gongura Plant Information in Tamil:
கோங்குரா அல்லது புளிச்ச கீரை என்பது ஒரு ரோசெல்லே தாவரத்தின் வடிவமாகும். இந்த தாவரத்தின் இலைகள் உணப்படுகிறது. இவை பொதுவாக புளிச்ச சுவையுடன் இருக்கும்.
இவை பொதுவாக இந்திய உணவுகளில் பயன்படுத்தபடுகிறது. அதிலும் குறிப்பாக கோங்குரா’பச்சடி , சட்னி அல்லது சுவையின் ஒரு வடிவம், ஆந்திர உணவு வகைகளில் ஒரு முக்கிய பகுதியாகும்.
மேலும் இவைகளை பயன்படுத்தி பலவகையான ஊறுகாய் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆந்திரப்பிரதேசம் முழுவதும் உள்ள வீடுகளில் கோங்குரா பரவலாக உட்கொள்ளப்படுகிறது என்றாலும் , ஹோட்டல்கள், உணவகங்கள், உணவகங்கள் மற்றும் உணவுக் கூட்டுகளில் கோங்குரா மிகவும் பிரபலமானது.
இது தமிழ்நாட்டிலும் உட்கொள்ளப்படுகிறது. இது ஒரு கோடை பயிர் ஆகும். அதனால் இது வெப்பமான இடங்களில் அதிக அளவு விளைகிறது.
முருங்கை கீரையை சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சி வைச்சிருக்கணும்
கோங்குராவின் வகைகள்:
கோங்குரா பொதுவாக இரண்டு வகைகளில் உள்ளது. அதாவது பச்சை தண்டு இலை மற்றும் சிவப்பு தண்டு இலைகள். சிவப்பு தண்டு ரகம் பச்சை தண்டு வகையை விட புளிப்பு அதிகம் கொண்டிருக்கும்.
பிறப்பிடம்:
இதன் பிறப்பிடம் என்று ஒன்று சரியாக கண்டறியப்படவில்லை. ஆனால் இது இந்திய முழுவதும் பயிரிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடகா, ஒடிசா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவு பயிரிடப்படுகிறது.
மாதுளை பழத்தினை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வேறுபெயர்கள்:
இது தமிழில் புளிச்ச கீரை, தெலுங்கில் கோங்குரா, மராத்தியில் அம்பாடி, இந்தியில் பித்வா , ஜார்கண்டில் கோட்ரம், பெங்காலியில் மெஸ்தாபட் , சத்தீஸ்கரில் அமரி , கன்னடத்தில் பாண்டி, மிசோவில் அந்தூர் , மணிப்பூரியில் சௌக்ரி, பஞ்சாபியில் சங்கோக்டா, சக்மாவில் ஆமெல்லி , போடோவில் முவிதா, கெனாஃப் இலைகள் ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் சின் பாங் என்றும் அழைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
கோங்குராவில் மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான இரும்பு, வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக ஆகியவை தேவையான அளவு அமைந்துள்ளது.
சேப்பக்கிழங்கினை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்
பயன்கள்:
புளிச்ச கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெற்று, புற்று செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
புளிச்ச கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சமைத்து சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது.
புளிச்ச கீரை தோல் வியாதிகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. அதாவது புளிச்ச கீரையை நன்றாக பசைபோல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் தடவினால் அவை நீங்கும்.
இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து. இரத்த சோகை குறைபாட்டை போக்க உதவுகிறது.
கருணைக்கிழங்கினை சாப்பாட்டில் அதிக அளவு சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை கண்டிபாக தெரிஞ்சிகோங்க
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |