வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புனித வெள்ளி பாடல்கள் 2025

Updated On: April 17, 2025 2:47 PM
Follow Us:
good friday songs in tamil
---Advertisement---
Advertisement

Good Friday Songs in Tamil | Punitha Velli Padalgal

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டு உயிர் நீத்த நாள் இதனை நினைவு கூறும் நாளாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இது அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் சண்டேவுக்கு முதல் நாள் வரும் வெள்ளி கிழமை நடக்கிறது. இயேசு கிறிஸ்து கி.பி 33 ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இறந்தார். இதனை நினைவு கூறும் விதமாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் இயேசு சிலுவையில் பட்ட துன்பங்களை நாம் நினைவு செய்து பார்க்க வேண்டும் என்பதே. இந்த நாளில் பாடல்களை கேட்டு இயேசுவை நினைத்து கொண்டிருப்போம். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் பல புனித வெள்ளி பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே பாடல் வரிகள்:

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர்
போதுமானவரே புதுமையானவரே
பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
ஒப்புக் கொடுத்தீர் ஐயா
கொல்கொதா மேட்டினிலே
கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
ஜீவனுள்ள தேவனே வாரும்
கொல்கொதா மலை மீதிலே
கல்வாரியே கல்வாரியே
முள்முடி சூடிய ஆண்டவர்
குருசின்மேல் குருசின்மேல்

மகிமையடையும் இயேசு ராஜனே
புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
கர்த்தர் துயர் தொனியாய்
என் இயேசுவே என் நேசரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
கண்டேன் கல்வாரியின் காட்சி
முள்முடி பாரமோ தேவனே
பாடுவோம் மகிழ்வோம்
கொல்கொதாவே கொலை மரமே

சிலுவை நாதர் இயேசுவின்
உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ
மனதுருகும் தெய்வமே இயேசய்யா
ஏன் இந்தப் பாடுதான் சுவாமி
ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நான் நுழைந்து விட்டேன்
கல்வாரி மலையோரம் வாரும்
ஏங்குதே என்னகந்தான் துயர்
உள்ளமெல்லாம் உருகுதையோ

உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்
கல்வாரியே கல்வாரியே
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
இயேசு உமதைந்து காயம்
இரத்தம் காயம் குத்தும்
நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ
என் மனது துடிக்குது

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கல்வாரி மா மாலையோரம்
உருகாயோ நெஞ்சமே நீ
நானே வழி நானே சத்தியம்
அழகானவர் அருமையானவர்
கல்வாரியின் கருணையிதே
பலிபீடத்தில் என்னை பரனே

புனித வெள்ளி 2025 | புனித வெள்ளி ஏழு வார்த்தைகள்

அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட அன்பே பாடல் வரிகள்:

அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட அன்பே-2
திசை மாறி அலைந்தேன் நான் செல்லும்வழி காண்பித்தீரே-2
உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2
பாவத்தில் மரித்தேன் நான் திரு இரத்தம் கழுவினதே-2
உம் கிருபையே உம் கிருபையே மாறா உம் அன்பின் கிருபையே-2 –அன்பே
கல்வாரி நாயகரே உம் கரம் உயர்த்தினதே-2
கரம் பிடித்தீரே பிடித்தீரே வழுவாமல் பிடித்துக்கொண்டீரே-2
உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2
இயேசுவே இயேசுவே உம்மோடு சேர்த்துக்கொண்டீரே-2

என் இயேசு ராஜனே பாடல் வரிகள்:

என் இயேசு ராஜனே
உம்மைப் பார்க்கையிலே
உள்ளம் உடையுதப்பா

கொல்கோதா மேட்டினில்
பாரமான சிலுவை
சுமந்து சென்ற பாதம்
எத்தனை அழகுள்ளது

சிலுவையில் தொங்கினீர்
உதிரம் சிந்தினீர்
எந்தன் பாவத்திற்காய்
இரத்தம் வழிந்தோடுதே

கைகளில் கால்களில்
ஆணிகள் பாய்ந்தே
ஜீவனை தந்தீர்
என்னை மீட்டிடவே

எங்கே சுமந்து போகிறீர் பாடல் வரிகள்:

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா

தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர

தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now