Gooseberry in Tamil
வணக்கம் பிரிஎண்ட்ஸ்..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள் அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். பொதுவாக இந்த உலகில் நாம் மிக மிக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். இப்படி நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக உள்ள உணவு பொருட்களை பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், வகைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் நெல்லிக்காயின் (Gooseberry) பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Amla in Tamil:
நெல்லிக்காய் என்பது யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். அதாவது இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.
நெல்லிகனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது ஆகும். இது பொதுவாக இந்திய மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இதன் கிளைகள் விரிந்து, பரந்து வளரும்.
இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். அதாவது ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும்.
இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். இது வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது.
இதன் காய்கள் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும். பொதுவாக ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்களில் காய்க்கும்.
பாதாமை அதிக அளவு சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சு வைச்சிக்கணும்
வகைகள்:
நெல்லியில்,
- கருநெல்லி
- அருநெல்லி என இரு வகைகள் உள்ளது.
பிறப்பிடம்:
நெல்லிக்காயின் பிறப்பிடம் எதுவென்றால் ஆசிய நாடான இந்தியா மற்றும் நேபாள் தான். ஆனால் தற்பொழுது உலக நாடுகள் அனைத்திலும் பயிரிடப்படுகிறது.
வேறுபெயர்கள்:
இது தமிழ் மொழியில் நெல்லி அல்லது நெல்லிக்காய் என்றும், ஆங்கில மொழியில் கூஸ்பெர்ரி (Gooseberry) அல்லது ஆம்லா (Amla) என்றும், Phyllanthus Emblica என்ற அறிவியல் பெயராலும் அழைக்கப்படுகிறது.
Peppermint பற்றி உங்களுக்கு தெரியுமா
ஊட்டச்சத்துக்கள்:
- புரதம் – 0.4 கி
- கொழுப்பு – 0.5 கி
- மாவுச்சத்து – 14 கி
- கால்சியம் – 15 மி.கி
- பாஸ்பரஸ் – 21 மி.கி
- இரும்பு – 1 மி.கி
- நியாசின் – 0,4 மி.கி
- வைட்டமின் பி1- 28 மி.கி
- வைட்டமின் சி – 720 மி.கி
- கரிச்சத்து
- சுண்ணாம்பு
- தாதுப் பொருட்கள்
- கலோரிகள் – 60
பயன்கள்:
நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது.
நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.
நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.
நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
ராகியை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |