கடலை மாவினை பயன்படுத்துவதற்கு முன்பாக இதை தெரிந்துகொள்ளுங்கள்…!

Advertisement

Gram Flour in Tamil

நாம் நிறைய வகையான சாப்பாடு மற்றும் ஸ்னாக்ஸ் வகையினை சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதனை தயாரிக்கும் பொருட்களை பற்றி வேறு சில விஷயங்கள் நம்மிடம் கேட்டால் அது அவ்வளவாக தெரியாது. அதிலும் குறிப்பாக நாம் சமையல் முதல் ஸ்னாக்ஸ் மற்றும் அழகு சாதன பொருட்கள் வரை என அனைத்திற்கும் அதிகமாக கடலை மாவு மற்றும் அரிசி மாவு தான் பயன்படுத்துகின்றோம். ஆனால் அதே கடலை மாவு மற்றும் அரிசி மாவு பற்றிய வேறு ஏதேனும் தகவல்கள் தெரியுமா என்றால் அதற்கு தெரியாது என்பது தான் பதிலாக இருக்கும். அதனால் இன்று ஆங்கிலத்தில் Gram Flour அழைக்கப்படும் கடலை மாவின் தகவல்களை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கடலை மாவு பற்றிய தகவல்கள்:

 gram flour benefits in tamil

கடலை மாவு ஆனது பெரும்பாலும் கடலை பருப்பில் அல்லது கொண்டை கடலையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இந்த கடலை மாவில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளது. அதாவது 100 கிராம் கடலை மாவில் வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் D, பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், இரும்புசத்து, கால்சியம் மற்றும் கலோரிகள் என இத்தனை வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது.

மேலும் கடலை மாவினை வங்காள தேசம், பாகிஸ்தான், நேபால், இலங்கை, இந்தியா மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

கடலை மாவில் என்ன செய்யலாம்:

சமையலை பொறுத்தவரை கடலை மாவினை வைத்து எண்ணிலடங்காத தின்பண்டங்கள் மற்றும் இதர உணவு பொருட்களை செய்யலாம்.

  • பஜ்ஜி
  • பக்கோடா
  • போண்டா
  • பர்பி
  • அடை
  • முறுக்கு
  • தோக்லா
  • கேட்டே கி சப்ஜி
  • அல்வா

மேலே சொல்லப்பட்டுள்ள உணவுகள் இல்லாமல் பல வகையான குருமா செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிமதுரத்தை பயன்படுத்தும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்.

கடலை மாவு பயன்கள்:

 கடலை மாவு பயன்கள்

கடலை மாவு ஆனது முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி முகத்தை அழகுபெறவும் மற்றும் பளிச்சென்று வைக்கவுக்கும் மிகவும் பயன்பெறக்கூடிய ஒன்றாக உள்ளது.

இந்த மாவில் உள்ள கலோரிகள் மற்றும் நார்சத்து ஆனது நம்முடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பினை வெளியேற்றி கொலஸ்ட்ரால் அளவினை சரியாக இருக்க செய்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்வதற்கும், பெருங்குடல் புற்றுநோய் செல்களை எதிர்க்கவும் கடலை மாவு பயனளிக்கிறது என்று கூறப்படுகிறது.

இத்தகைய கடலை மாவு ஆனது இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு தூக்கம் வரச் செய்கிறது. அதாவது அமினோ அமிலம், டிரிப்டோபான் மற்றும் செரோடோனின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் இதனை நாம் உணவாக செய்து சாப்பிடும் போது இரவு நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

மேலும் கடலை மாவு தலை முடி வளர்ச்சிக்கும் சிறந்த தீர்வினை அளிக்கக்கூடியதாக இருப்பதால் பெரும்பாலான பெண்கள் இதனை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

யாரெல்லாம் கடலை மாவினை உட்கொள்ள கூடாது:

  • சிறுநீரத்தில் கல் உள்ளவர்கள்
  • இரத்த சர்க்கரை உள்ளவர்கள்
  • அலர்ஜி உள்ளவர்கள்
  • மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனை படி சரியான அளவில் கடலை மாவினால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

எள்ளை சாப்பிடுவதற்கு முன்பாக அதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement