திராட்சை பழம் பற்றிய தகவல்
பழங்கள் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எல்லாருக்கும் ஒரே விதமான பழங்கள் பிடிக்கும் என்றில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பழங்கள் பிடிக்கும். அதில் ஒன்று தான் திராட்சை. இந்த திராட்சையை பலரும் விருப்பி சாப்பிடுவார்கள். இதை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தான் தெரியும். ஆனால் அவை எவ்வாறு பயிரடப்படுகிறது, வகைகள் என்ன போன்ற விவரம் எல்லாம் தெரிந்திருக்காது. அதனால் இந்த பதிவில் திராட்சை பற்றிய தகவலை அறிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
திராட்சை பற்றிய தகவல்:
திராட்சை பழத்தை தமிழில் கொடுமுந்திரி பழம் என்று அழைப்பார்கள். இது விட்டிஸ் பேரினத்தை சேர்ந்தது. இவை கொடி இனத்தை சேர்ந்தது. இந்த பழமானது உருண்டையாகவும், குலை குலையாக காய்க்க கூடியது. 6-லிருந்து 300 வரை குலையாக காய்க்க கூடியது. இது கறுப்பு, கருநீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது.
பாசிப்பயரை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
திராட்சை வகைகள்:
பன்னீர் திராட்சை, அனாப்-சாகி, தாம்சன்(விதையில்லாதது), அர்காவதி,அர்கா சியாம்,அர்கா காஞ்சனா,அர்கா ஹான்ஸ், மாணிக்சமான், சோனாகா, போன்ற வகைகள் உள்ளது.
சாகுபடி:
திராட்சை பழத்தை சாகுபடி செய்வதற்கு வண்டல் மண்பூமி ஏற்றதாகும். மண்ணின் காரஅமிலத்தன்மை 6.5 முதல் 7-க்குள் இருக்க வேண்டும். மண்ணின் உப்பு அளவு 1-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுவாக பன்னீர் திராட்சை சாகுபடிக்கு உப்பு, உவர்மண் தவிர கரம்பை மண், செம்மண், வண்டல் மண் போன்றவை ஏற்றவை. தமிழ் நாட்டில் மலைப்பகுதியை தவிர அனைத்து இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றதாகும்.
பன்னீர் ரகங்களுக்கு குழிகளை 0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3 மீட்டர் இடைவெளியில் குழி தோண்ட வேண்டும். குழிகளை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது குப்பைகள் பசுந்தழை உரமிட்டு நிரப்ப வேண்டும். பின்பு ஜூன்-ஜூலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.
செடிகளை நடவு செய்த பிறகு மூன்றாவது நாள் நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை செய்வதற்கு ஒரு நாள் முன்பு தண்ணீர் விட கூடாது.
Broccoli-யை சாப்பிடுவதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |