Green Apple in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் காணப்போகிறோம். அது என்ன தகவலாக இருக்கும் என்று மேல் படித்திருப்பீர்கள். இருந்தாலும் இன்னொரு முறை உங்களுக்கு தெளிவாக சொல்கிறேன். நீங்கள் க்ரீன் ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? பொதுவாக ஆப்பிள்களில் நாம் அனைவரும் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆப்பிளை தான் பார்த்திருப்போம். சிலர் வேண்டுமானால் கிரீன் ஆப்பிள் பார்த்திருக்கலாம். சரி வாங்க நண்பர்களே கிரீன் ஆப்பிள் பற்றிய தகவல்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கிரீன் ஆப்பிள் பற்றிய தகவல்:
இது பச்சை ஆப்பிள் அல்லது புளிப்பு ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. இது 1868 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தோன்றிய ஒரு ஆப்பிள் சாகுபடி என்று சொல்லப்படுகிறது. இந்த கிரீன் ஆப்பிள் Granny Smith என்ற ஆங்கில பெயராலும் அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த மரம் மாலஸ் சில்வெஸ்ட்ரிஸ், ஐரோப்பிய காட்டு ஆப்பிளின் கலப்பினமாக கருதப்படுகிறது.
இந்த கிரீன் ஆப்பிளானது கடினமாகவும் உறுதியாகவும் இருக்கும். அதேபோல இது வெளிர் பச்சை தோல் மற்றும் மிருதுவான, ஜூசி சதை கொண்டது. சுவை புளிப்பு அமிலமாக இருக்கும். மேலும் இது ஒரு பிரபலமான சமையல் ஆப்பிளாக பயன்படுத்தப்படுகிறது.
சங்கு பூவை பார்த்திருக்கிறீர்களா.. அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள் |
அதுபோல ஆப்பிள் முற்றிலும் பச்சை நிறத்தில் இருந்து, பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. இந்த கிரீன் ஆப்பிளானது அமெரிக்காவில் மூன்றாவது பிரபலமான ஆப்பிள் என்று 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆப்பிள் சங்கம் தெரிவித்துள்ளது.
கிரீன் ஆப்பிள் நன்மைகள்:
கிரீன் ஆப்பிளில் குறைவான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும் அதிக நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
கருப்பு பீன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா..
ஊட்டச்சத்தில் உள்ள ஒரே பெரிய வேறுபாடு வைட்டமின் A ஆகும். இதை சிவப்பு ஆப்பிளுடன் ஒப்பிடும்போது பச்சை ஆப்பிளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வைட்டமின் A அதிகம் உள்ளது. மறுபுறம், சிவப்பு ஆப்பிள்கள் பச்சை ஆப்பிள்களை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன.
- கண் பார்வையை மேம்படுத்துவதற்கும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும்
- முகப்பரு அபாயத்தைக் குறைப்பதற்கும்
- எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும் இது உதவுகிறது.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ ரோஸ்மேரி பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |