Grouper Fish in Tamil – களவாய் மீன் பற்றிய சுவாரஷ்யமான தகவல்..!

Advertisement

களவாய் மீன் பற்றிய தகவல் – Grouper Fish in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இந்த உலகில் பலவகையான உயிரினங்கள் உள்ளது. அவற்றில் ஒரு இனம் மீன்கள் ஆகும். இந்த மீன்கள் பெருமைப்பாலும் ஆறு, குளம், குட்டை, கடல், ஏறி என்று அனைத்து இடங்களிலும் வாழக்கூடியது. ஆறு, குளம், குட்டை போன்றவற்றை விட கடலில் தான் லட்சக்கணக்கான நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன அவற்றில் ஓன்று தான் களவாய் மீன் ஆகும்.

இன்று நாம் இந்த களவாய் மீனை பற்றி தான் சுவரஷயமான தகவலை தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க இந்த Grouper Fish பற்றிய சுவாரஷ்யமான தகவலை அறியலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மீன்கள் தண்ணீரில் எப்படி நீந்துகிறது தெரியுமா..?

Grouper Fish in Tamil:grouper fish images

களவாய் மீன் (Epinephelus) என்பது ஒருவகை அரிய கடல் மீன் இனம் ஆகும்.

களவாய் மீன்களில் பல இரக மீன்கள் இருக்கின்றன. என்றாலும், தமிழ்நாட்டில் பாம்பன் கடல் பகுதியில் தாழங்களவாய், புள்ளிக் களவாய், மரக்களவாய், சாம்பல்நிறக் களவாய், சிவப்புக் களவாய் ஆகிய வகை மீன்கள் காணப்படுகின்றன.

இதில் சிவப்புக் களவாய் மீன் அந்தமான் கடல் பகுதியில் காணப்பக்கூடியவை. அரிதாக சிலசமயம் தமிழகக் கடல் பகுதியில் பிடிபடும்.

இந்த களவாய் மீன்கள் ஆண், பெண் தன்மைகள் கலந்தே பிறக்கின்றன.

இதில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் தன்மை இந்த மீன்களுக்கு உண்டு.

ஆண் மற்றும் பெண் தன்மைகளோடு முதல் 4 ஆண்டுகள் இருக்கும்.

அதைத் தொடர்ந்து களவாய் மீன் 2 அடி நீளம் வளர்ச்சி அடைந்து பெண்ணாக இனமுதிர்ச்சி அடையும். மீண்டும் தன்னுடைய 15-வது வயதில் இவை ஆண் மீனாக மாறுகின்றன.

களவாய் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால், அதிக வயதான பெண் மீன்கள், ஆணாக மாறாமல் பெண்ணாகவே இருந்து தன்னுடைய இனத்தைப் பெருக்கும்.

ராட்சத களவாய் 270 சென்டிமீட்டர்கள் (110 அங்குலம்) அதிகபட்சமாக பதிவுசெய்யப்பட்ட நிலையான நீளத்துடன் பெரிய அளவில் வளரக்கூடியது , இருப்பினும் அவை பொதுவாக 180 சென்டிமீட்டர்கள் (71 அங்குலம்), மற்றும் அதிகபட்சமாக வெளியிடப்பட்ட எடை 400 கிலோகிராம்கள் (880 பவுண்டுகள்) ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஹெர்ரிங் மீன்கள் பற்றிய சில அற்புதமான தகவல்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement