GST நம்பர் எடுத்து பிசினெஸ் செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா.?

Advertisement

Benefits of GST in Business in Tamil

இக்காலத்தில் அனைவரும் அதிகமாக இடத்தில் கேட்டிருப்பது GST என்ற வார்த்தையை தான். அந்த அளவிற்கு இந்தியாவில் GST முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் GST என்பது நல்லதல்ல என்று தான் நினைத்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக பிசினெஸ் செய்வபர்களுக்கு GST என்னென்ன நன்மைகள் அளிக்கிறது என்பது தெரிவதில்லை. ஆகையால், GST நம்பர் எடுத்து பிசினெஸ் செய்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) GST ஆகும். 2017 ஆம் ஆண்டில் இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. GST நோக்கம் வணிகத்திற்கான இணக்கத்தை எளிதாக்குதே ஆகும். ஆகையால் பிசினெஸ் செய்பவர்களுக்கு GST அளிக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஜிஎஸ்டி என்றால் என்ன? | GST Meaning in Tamil

GST Benefits For Business in Tamil: 

 benefits of gst in business in tamil

GST எடுத்து நீங்கள் ஒரு பொருளை வாங்கும்போது (INPUT TAX CREDIT) 18% அல்லது 28% டாக்ஸ் PAY பண்ணி வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் PAY பண்ண டாக்ஸ் உங்களுக்கு கிரெடிட் ஆகும். அதுமட்டுமில்லாமல் உங்கள் விற்பனை பொருளை விற்பனை செய்யும்போது ஒரு பொருளுக்கு 18% GST ADD பண்ணி கொடுக்கும்போது அதிலிருந்து வரும் GST தொகையை அப்படியே நீங்கள் அரசாங்கத்திற்கு செலுத்துப்போவதில்லை. நீங்கள் பொருள் வாங்கும்போது எவ்வளவு GST பே பண்ணிங்களோ அந்த தொகையை கழித்து விட்டு மீதமுள்ள தொகையை தான் அரசாங்கத்திற்கு செலுத்துவீர்கள். ஆகையால் நீங்கள் பொருட்களை வாங்கும்போது GST PAY பண்ணி வாங்குகிறீர்கள் என்றால் அதற்கான தொகை உங்களுக்கு கிரெடிட் ஆகி இருக்கும்.

முக்கியமாக, E- COMMERCE பிசினஸ் செய்கிறீர்கள் என்றால் GST மிகவும் அவசியம். உங்கள் தொழிலை உள்ளூர் மட்டுமில்லாமல் வெளி இடங்களுக்கும் எடுத்து செல்வதற்கு GST மிகவும் உதவியாக இருக்கும். மேலும், GST இருந்தால் அதனை நீங்கள் INCOME PROOF ஆகவும் (வருமான ஆதாரம்) பயன்படுத்தி கொள்ளலாம். இவற்றிக்கு மேலாக நீங்கள் GST -யிற்கு சரியான நேரத்தில் ஃபைல் செய்வதன் மூலம் மட்டுமே GST மூலம் நல்ல பலன்களை பெற முடியும். GST எடுத்து ஃபைல் சரியாக இல்லையென்றால் பினாலிட்டி விதிக்கப்படும்.

GST மற்றும் VAT வரிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தெரியுமா உங்களுக்கு

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement