ரோட்டில் பூத்துக் குலுங்கும் குல்மோஹர் மரத்தை பற்றி தெரியுமா….

Advertisement

குல்மோஹர் மரத்தின் நன்மைகள் 

மனிதன் உயிர்வாழ மரத்தின் துணை தேவை என்ற போதிலும், மரத்தினால் நமக்கு கிடைக்கும் சிறு சிறு உதவிகள் ஏராளம். இன்றைய காலகட்டத்தில் மரம் இல்லாமல் நாம் உயிர் வாழவே முடியாது என்ற நிலை இருப்பதால், மரங்களை பாதுகாப்பது நம்மை காப்பது போன்றதாகும். மரங்கள், நமக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பை தருகிறது. அந்த வகையில் நாம் வளர்க்கும் மரங்கள் மருத்துவ மற்றும் வணிக பயன் நிறைந்தவையாகவும், சுற்றுசூழலை மெருகேற்றுவதாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு மரம் அழகாக பூக்கும் மரமாகவும் இருந்தால் எப்படி இருக்கும். அத்தகைய சிறப்புகளை பெற்ற குல்மோஹர் மரம் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்…

Gulmohar Tree in Tamil

Gulmohar flower benefits

குல்மோஹர் மரம், மிக அழகான, வெப்பமண்டலத்திற்கு உகந்த மரங்களில் ஒன்றாகும். இந்த மரங்கள் அளவில் மிகப்பெரிய மரமாக காணப்படும். இந்த மரம்  இலையுதிர் மற்றும் பூக்கும் மரமாகவும். இந்த மரம் ஒரு மெல்லிய வாசனை மற்றும் அழகான படர்ந்த தோற்றத்தை பெற்றிருக்கும். குல்மோஹர் மரம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும். இந்த மரம், வீடுகளில் வெளிப்புறங்களில் அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.

குல்மோஹர் மரத்தினை செம்மயிர்க்கொன்றை, மயிற்கொன்றை, மேமாதப்பூ மரம், நெருப்புக் கொன்றை எனப் பல பெயர்கள் இந்தியாவில் அழைக்கப்படுகிறது.

குல்மோஹர் மரத்தின் பூர்வீகம் மடகாஸ்கர் ஆகும், ஆனால் இந்தியாவின் வெப்பமண்டல வானிலைக்கு ஏற்றதாக காணப்படுகிறது. அழகு மிளிர செய்யும் கொன்றை மரத்தில் பூக்கும் பூ சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணத்துடன்  ஐந்து இதழ்களை கொண்ட மலராக இருக்கும். இந்த பூவின் வண்ணம், நேர்த்தியான இதழ்கள் அமைப்பு கண்ணை கவரும் விதம் இருக்கும். வசந்த காலம்  மற்றும் கோடைகாலத்தில் இந்த மரம் பூப்பூக்கும்.

 

உலகிலேயே மிக உயரமான மரம் எது தெரியுமா..?

குல்மோஹர் மரத்தில் இருக்கும் காய், மிகக்கடினமாகவும், அடர்-பழுப்பு நிற விதைகளை கொண்டும் இருக்கும். காய் முதிர்ச்சியடைந்து வெடிக்கும் போது அதன் உள்ளேயுள்ள விதைகள் சிதறக்கூடியதாக இருக்கும். இந்த மரம் ஒரு இலையுதிர் மரமாகும், குல்மோஹர் மரத்தின் இலைகள் நவம்பர் மாதத்தில் உதிரத்தொடங்கும்.

குல்மோஹர் மரம் கேரளாவின் புனித மரமாகும். இந்த மரத்தின் மலர் சிலாங்கூர் மற்றும் மலேசியா போன்ற நகரங்களில், அதிகம் விரும்பப்படும் மலராக உள்ளது.

யூகலிப்டஸ் மரம் பற்றிய தகவல்..! | Eucalyptus Tree in Tamil

குல்மோஹர் மரத்தின் பயன்பாடு:

gulmohar benefits in tamil

குல்மோஹர் மரத்தின் மருத்துவ பயன்:
  • குல்மோஹர் மரத்தில் உள்ள பூ நிறைய நன்மைகளை தரக்கூடியது. கூந்தல் உதிர்வு அதிகமாக இருக்கும் நபர்கள் இந்த செம்மயிர்க்கொன்றை பூக்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை போக்கவும் இந்த மரத்தின் பூக்கள்  உதவுகிறது.
  • இந்த பூவில் ஆன்டி டயாபெட்டிக், வயிற்றுப் போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
  • குல்மோஹர் மரத்தின் இலைகள் நீரிழிவு நோய்க்கு எதிராக போராடக்கூடியது. இந்த இலைகளின் சாறு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • மலச்சிக்கல், முடக்கு வாதம், வீக்கம், நீரிழிவு, மலேரியா மற்றும் நிமோனியா,கீல்வாத வலி போன்ற பல உடல் பிரச்சனைகளுக்கு இது பழங்காலம் முதலே பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த மரம் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் அவளை சரிசெய்யவும் உதவுகிறது.

தேவதாரு மரம் பற்றி தெரிந்து கொள்வோமா..?

குல்மோஹர் மரத்தின் வணிக பயன்:
  • குல்மோஹர் மரக்கட்டைகள் அதிக அளவு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • தேனீ வளர்ப்பில், தேனீக்கு உணவளிக்க குல்மோகரின் பூக்கள்  பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த மரம் நீரில் கரையக்கூடிய தடிமனான பசையை கொண்டுள்ளது. இந்த இயற்கை பசை மரச்சாமான்கள் செய்வதற்கும், நெசவு தொழிலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • குல்மோஹர் மரத்தின் விதைகள் அலங்கார நகைகள் செய்ய பயன்படுகிறது.

இது இந்திய நாகரிகத்தின் பழமையான அலங்கார மரங்களில் ஒன்றாகும். எனவே, உங்கள் தோட்டத்தில், கோடை முழுவதும் பூக்கும் மரம் இருக்க வேண்டும் என்று நினைத்தால் குல்மோஹர் மரத்தை உங்கள் வீட்டில் வளர்க்க தொடங்குகள். பூத்துக் குலுங்கும் அந்த மரம் உங்களுக்கு ஒரு நேர்மறையான எண்ணத்தை விதைப்பதுடன் அதிக மருத்துவ பயன்கள் தரக்கூடியதாகவும் விளங்கும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil

Advertisement