மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது எப்படி | Handicap Id Card How To Apply in Tamil

Handicap Id Card How To Apply in Tamil

  மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை | Unique Disability Id Card Peruvathu Eppadi

வணக்கம் வாசகர்களே உங்களுக்காக தினமும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் RPWD Act 2016-ம் ஆண்டில் அறிவித்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவது எப்படி என்பதை பார்க்க போகிறோம். அதனை பின் வரும் பதிவில் தெளிவாக கூறியிருக்கிறோம். அதனை படித்து பயன் பெறவும். வாங்க அதனை தெளிவாக காண்போம்.

இலவச மருத்துவ காப்பீடு திட்டம்.

மாற்றுத்திறனாளி ஸ்மார்ட் கார்டு:

 • மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை எங்கு வாங்குவது என்றால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் (District Differently Abled Welfare Officer) எல்லா மாவட்டத்திலும் இருக்கும்.
 • மாற்றுத்திறனாளி அடையாள அட்டை யார் யார் வாங்கலாம் என்றால் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் RPWD Act 2016 படி இந்த அடையாள அட்டையை பெறலாம்.

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வாங்குவதற்கு தேவைப்படும் ஆவணம்:

 1. குடும்ப அட்டை
 2. ஆதார் அட்டை
 3. பாஸ்போட் சைஸ் புகைப்படம் 03
 4. மருத்துவ சான்றிதழ்
 5. VAO சான்றிதழ்.

மருத்துவ சான்றிதழ் எங்கு வாங்க வேண்டும்?

 • கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு எலும்பு முறிவு மருத்துவரிடம் வாங்க வேண்டும்.
 • கண் பார்வை மாற்றுத்திரனாளிகள் அரசு கண் மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும்.
 • வாய் பேச முடியாதவர்கள், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் அரசு காது, மூக்கு தொண்டை மருத்துவரிடம் சான்றிதழ் பெறவும்.
 • மன நல வளர்ச்சி குறைவாக உள்ள 12 வயது உடைய மாற்றுத்திறனாளிகள் அரசு மன நல மருத்துவரிடமும், குழந்தை நல மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 • 12 வயது மன வளர்ச்சி குறைவாக உள்ள மாற்றுத்திறனாளிகள் மன நல மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 • பல்வகை மாற்றுத்திறனாளிகள் 3 நபர் கொண்ட மருத்துவ குழுவினர்களிடம் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது எப்படி?

 • மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அங்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் என்ன என்பதை அறிந்து விண்ணப்பிக்கவும்.
 • பின்பு அவர்கள் மாவட்ட நிர்வாகம் மருத்துவ சான்றிதழ் வாங்குவதற்காக அட்டையை வழங்குவார்கள். அந்த அட்டையை பெற்று கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் கொடுத்து அவர்கள் தரும் சான்றிதலை பெற்றுகொண்டு கடைசியாக அதனை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  அலுவலகத்திற்கு சென்று அலுவலரிடம் சான்றிதலை கொடுத்து பின் அவர்கள் கையொப்பம் இட்டு நமக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குவார்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil