Hazelnut in Tamil
பொதுவாக நாம் நிறைய வகையான உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் என நிறையவற்றை சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதில் குறிப்பாக நாம் அனைவரும் உலர் உணவு பொருட்களான திராட்சை, முந்திரி, பேரிச்சம் பழம், பிஸ்தா மற்றும் இதர நட்ஸ் வகைகளை தான் சாப்பிடுவோம். இவற்றை எல்லாம் நாம் ருசித்து சாப்பிடுவதோடு சரி அது எங்கிருந்து தயாரிக்கப்படுகிறது, இதனுடைய மற்ற சிறப்பு அம்சம் என்ன என்ற தகவல்களை எல்லாம் தெரிந்துக்கொள்வது இல்லை. அப்படி தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் கூட அதற்கான பதிலை எதில் இருந்து எடுப்பது என்ற குழப்பங்களும் வந்து விடுகிறது. அதனால் இன்று ஹேசல்நட் பற்றிய தகவலை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
ஹேசல்நட் பற்றிய தகவல்கள்:
ஹேசல் மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் ஹேசல்நட் பழமாகும். இந்த பழம் ஆனது கோரிலஸ் என்ற இனத்தினை சேர்ந்ததாகும். இதனுடைய மற்றொரு பெயராக ஃபில்பர்ட்ஸ் அல்லது கோப்நட்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.
இது கோள வடிவிலான அமைப்பினையும் 15 முதல் 25 மி.மீ நீளத்தினையும், 10 முதல் 15 மி.மீ விட்டத்தினையும் கொண்டிருக்கிறது. மேலும் இதன் மேலே உமி ஓடுகளும் காணப்படுகிறது. இதனின் நிறமானது அடர் மஞ்சள் நிறம் ஆகும்.
மேலும் இதனை பெரும்பாலான நபர்கள் பொடியாக, பச்சையாக மற்றும் வறுத்து என ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஹேசல்நட் உற்பத்தியினை துருக்கி, அமெரிக்கா, அஜர்பைஜான் மற்றும் இத்தாலி ஆகியவை செய்து வருகிறது.
இத்தகைய ஹேசல்நட் ஆனது கொஞ்சம் இனிப்பான சுவையினையும் மற்றும் நறுமணத்தினையும் கொண்டிருக்கிறது. இதனுடைய வாசனையின் காரணமாக இதனை காபி தூள், சாக்லேட் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வகைகள்:
- ஹைபிரிட் ஹேசல்நட்
- அமெரிக்க ஹேசல்நட்
- பீக் ஹேசல்நட்
- ஐரோப்பிய ஹேசல்நட்
ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுவீர்களா.. அப்போ இந்த விஷயம் தெரியுமா
ஹேசல்நட் சத்துக்கள்:
- மெக்னீசியம்
- மாங்கனீசு
- கலோரிகள்
- கொழுப்புசத்து
- கார்போஹைட்ரேட்
- தாமிரம்
- புரதம்
- சோடியம்
- கொழுப்புசத்து
- சர்க்கரை
- ஃபைபர்
- வைட்டமின் E
மேலே சொல்லப்பட்டுள்ள சத்துக்கள் அனைத்தும் 1 அவுன்ஸ் அதாவது 28 கிராம் ஹேசல்நட்டில் நிறைந்து இருக்கிறது.
பால் நெருஞ்சில் பற்றிய சில தகவல்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |